Shadow

Tag: பிச்சைக்காரன்

பிச்சைக்காரன் – சகுனமும்! திரைப்படத் தலைப்பும்?

பிச்சைக்காரன் – சகுனமும்! திரைப்படத் தலைப்பும்?

கட்டுரை, சமூகம், சினிமா, திரைச் செய்தி
பிச்சைக்காரன் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரைப் பாராட்டிய இயக்குநர் மோகன் ராஜா, “இந்தப் படத்தின் வெற்றி, தலைப்பு விஷயத்தில் தமிழ் சினிமாவுக்கு இருக்கும் மூட நம்பிக்கைகளை உடைத்துள்ளது. ‘தனி ஒருவன்’ என்ற தலைப்பு வச்சதுக்கு, “என்ன சார் தனி ஒருவன்னு வச்சிருக்கீங்க? படம் அவ்ளோதான்”எனச் சொன்னாங்க. தனியா ஒருவன்னா வச்சேன்; தனி ஒருவன்னுதான வச்சேன்! அதுக்கே பிச்சைக்காரன்னு தலைப்பு வச்சாப்ல என்னைப் பார்த்தாங்க. அப்ப பிச்சைக்காரன் வச்சதுக்கு அவங்களை எப்படிப் பார்த்திருப்பாங்க? ‘மாதவனுக்கு இதான் சார், இறுதிச்சுற்று. இனி அவருக்கு படமே வராது. தலைப்பே சரியில்லை’ன்னாங்க. இப்ப அந்த மூட நம்பிக்கைலாம் உடைஞ்சிடுச்சு. அப்படிச் சொல்லக் கூடாது. இனி இது போல தலைப்பு வைப்பாங்க. “அபசகுனம்” என்ற தலைப்புக்கு கவுன்சிலில் பத்து பேரு சண்டை போட்டாலும் போட்டுக்குவாங்க” என்றார். “நான் விஜய் ஆண்டனியிட...
பிச்சைக்காரன் விமர்சனம்

பிச்சைக்காரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோமாவில் இருக்கும் தனது தாய் மீள வேண்டுமென்பதற்காக, ஒரு மண்டலத்திற்கு தன் அடையாளத்தையும் கெளரவத்தையும் விட்டு பிச்சையெடுப்பதாக வேண்டுதல் வைக்கிறான் பணக்காரனான அருள். அந்த வேண்டுதல் நிறைவேறியதா இல்லையா என்பதுதான்பிச்சைக்காரனின் கதை. கஞ்சத்தனத்திற்குத் தனது நடிப்பால் புது இலக்கணம் வகுத்துள்ளார் முத்துராமன். பணத்தைக் கண்டதும் சொக்கித் தூங்குவதும், விரலென்ன உயிரே போனாலும் பைசா தர முடியாதென வாயில் அவராக துணியை அடைத்துக் கொள்வதும் செம காமெடி. முத்துராமனைப் போன்றே, எல்லாப் பாத்திர வடிவமைப்பிலும் இயக்குநர் சசி கவனமாக இருந்து படத்திற்குச் சுவாரசியத்தைக் கூட்டியுள்ளாரென்றே சொல்லவேண்டும். உதாரணம், முத்துராமனின் கார் ஓட்டுநராக வருபவரைச் சொல்லலாம். விஜய் ஆண்டனியின் அம்மாவாக தீபா ராமானுஜம் நடித்துள்ளார். உத்தம வில்லனில் பூஜா குமாரின் அம்மாவாகவும், பசங்க -2 இல் பிரின்சிபலாகவும், ரஜினிமுருகனில் சிவகார...
பிச்சைக்காரன் – நிச்சய வெற்றி.!

பிச்சைக்காரன் – நிச்சய வெற்றி.!

சினிமா, திரைத் துளி
“இந்தப் படம் ஹிட்டாகும் என்பதில் எள்ளளவும் எனக்கோ, விஜய் ஆண்டனிக்கோ சந்தேகமில்லை. முதல் நாள் முதல் இந்த நொடி வரை அதில் ரொம்ப தெளிவா இருக்கேன். ஆனால், விநியோகஸ்தர்கள் படம் பார்க்கும் பொழுது மட்டும், ‘என்ன சொல்வாங்களோ?’ எனக் கொஞ்சம் டென்ஷனா இருந்தது. அவங்க ஸ்க்ரீனிங் முடிந்ததும், கே.ஆர்.ஃப்லிம்ஸ் சரவணன் முகத்தைப் பார்த்தேன். சிரிச்சுட்டு இருந்தார். டென்ஷன் போய் மீண்டும் நம்பிக்கை வந்துடுச்சு” என்றார் பிச்சைக்காரன் படத்தின் இயக்குநர் சசி. “இந்தப் படத்துக்காக பல இடங்களில் நிஜமாகவே பிச்சை எடுத்தேன். என்னை பிச்சைக்காரர்கள் மத்தியில் உட்கார வைத்து விட்டு தூரத்தில் கேமராவில் இருந்து படம் பிடித்தார்கள். சில சமயம் நிஜ பிச்சைக்காரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு பணம் கொடுத்து நடிக்க வைத்தோம். அப்போது அவர்களின் கதைகளை எல்லாம் கேட்டேன். ரொம்ப கொடுமையாக இருந்தது. மகனும் மருமகளும் துரத்தி விட்டதால் பிச...