தில்லுக்கு துட்டு 2 விமர்சனம்
மாயாவிடம் யாராவது காதலைச் சொன்னால், அவர்களை அவளது தந்தை துர்மந்திரவாதியான கருடராஜா பட்டதாரி ஏவி விட்ட துஷ்ட சக்தி உண்டு இல்லை எனச் செய்துவிடுகிறது. சந்தானம் மாயாவிடம் காதலைச் சொல்ல, அந்தப் பேய் அவரையும் போட்டுப் புரட்டியெடுக்கிறது. சந்தானம் காதலில் எப்படி வெல்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
ஜில்.. ஜங்.. ஜக் படத்தில் பை எனும் பைந்தமிழாகக் காமெடியில் கலக்கியிருக்கும் பிபின், இப்படத்தில் துர்மந்திரவாதி கருடராஜ பட்டாதரியாக வருகிறார். அவர் முதலில் டெரராக அறிமுகமாகி, சந்தானம் அவரைச் சந்தித்த பின் நகைச்சுவைக்கு மாறுகிறார். தில்லுக்கு துட்டு படத்தில், இரண்டாம் பாதி நகைச்சுவைக்குப் பொறுப்பேற்றிருந்த நான் கடவுள்’ ராஜேந்திரன், இப்படத்தின் சந்தானத்தின் மாமாவாக படம் முழுவதும் வந்தாலும், முதற்பாகம் அளவிற்கு நகைச்சுவைக்கு உதவவில்லை.
நாயகியாக, மாயா பாத்திரத்தில் ஸ்ரீதா சிவதாஸ் அறிமுகமாகியுள...