Shadow

Tag: பிரக்யா நக்ரா

சத்யராஜ், ஜெய், யோகிபாபு | பேபி & பேபி

சத்யராஜ், ஜெய், யோகிபாபு | பேபி & பேபி

சினிமா, திரைத் துளி
GPS Creations சார்பில் G.P. செல்வகுமார் தயாரிப்பில், Yuvaraj Films சார்பில் B. யுவராஜ், வெளியிட, நடிகர்கள் ஜெய், சத்யராஜ், யோகி பாபு நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் பேபி & பேபி. தமிழ் சினிமாவில் ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த வகையில் குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. காமெடியும், எமோஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரதாப். இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க, நடிகர் சத்யராஜ் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 'நாளைய தீர்ப்பு' படத்தில், விஜயின்...
வரலாறு முக்கியம் விமர்சனம்

வரலாறு முக்கியம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கேரளப் பெண்ணைக் காதலித்து மணம் முடிப்பதை வரலாறென்றும், அது பதியப்படுவது முக்கியமென்றும் கருதி ஒரு படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் சந்தோஷ் ராஜன். யமுனா, ஜமுனா என்ற கேரளத்துச் சகோதரிகள், கார்த்திக்கின் தெருவிற்குக் குடி வருகின்றனர். தங்கை ஜமுனா கார்த்திக்கைக் காதலிக்க, கார்த்திக்கோ ஜமுனாவை விட அழகாக இருப்பதாக நினைக்கும் யமுனாவைக் காதலிக்கத் தொடங்குகிறான். அக்கேரளத்துப் பெண்களின் அப்பாவிற்கு, மகள்களை துபாய் வாழ் மணமகனுக்குக் கல்யாணம் செய்து வைக்க ஆசை. அவரது எதிர்ப்பை மீறி, கார்த்திக் தன் காதலில் எப்படி வாகை சூடுகிறான் என்பதே படத்தின் கதை. நாயகனை யூ-ட்யூபராகக் காட்டினாலும், வேலை வெட்டியில்லாதவர் கணக்கிலேயே அவரது தந்தை கே.எஸ்.ரவிக்குமார் போல் வைக்க வேண்டியுள்ளது. அழகான பெண்ணைக் கண்டதும் காதல், பின் அவள் ஒத்துக் கொள்ளும்வரை இடைவிடாது துரத்திக் கொண்டே இருப்பதென இயக்குநர் ராஜேஷின் எஸ்.எம்.எஸ். ...