Shadow

Tag: பிரபு தேவா

The GOAT விமர்சனம்

The GOAT விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
The Greatest Of All the Time - எல்லாக் காலத்திலும் மிகச் சிறந்தவர். Goat of the SATS (Special Anti Terrorism Squad) என்றழைக்கப்படும் நாயகன், பயங்கரவாதத்திற்கான எதிரான நடவடிக்கைகளில் மிகச் சிறப்பாகச் செயற்படுகிறார் எனப் பொருள் கொள்ளலாம். 'இனி நடிக்கப் போவதில்லை' என்ற விஜயின் முடிவிற்குப் பிறகு வந்த படம் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கு எகிறியிருந்தது. இரண்டு விஜய் இணைந்து கலக்கும் டீசர் அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்தது. நாயகன் M.S. காந்தி ஜீவனைத் தொலைத்து விடுகிறார். பதினாறு வருட சோகத்திற்கும் குற்றவுணர்ச்சிக்கும் பிறகு ஜீவன் கிடைத்துவிட்டாலும், அதன் பின் கண் முன்னாலேயே நண்பர்களைக் காப்பாற்ற இயலாமல் இழந்து விடுகிறார் காந்தி. கடைசியில் வில்லன் ராஜிவ் மேனனின் சூழ்ச்சிக்கு பலியாகி, M.S.காந்தி தங்கப்பதக்கத்தினைப் பெறுவதுதான் படத்தின் கதை. இளம் வயது ஜீவனாக நடித்துள்ள மா...
பேட்ட ராப் – பிரபுதேவா | வேதிகா | சன்னி லியோன்

பேட்ட ராப் – பிரபுதேவா | வேதிகா | சன்னி லியோன்

சினிமா, திரைத் துளி
நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. மேலும் இந்தத் திரைப்படத்தின் தமிழகத் திரையரங்க வெளியீட்டு உரிமையை சஃபையர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.இயக்குநர் எஸ்.ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, கலாபவன் ஷாஜோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி.கே.தினில் கதை எழுதி இருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. ஆர். மோகன் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ப்ளூ ஹில் பி...
இசையும் நடனமும் இணையும் #arrpd6

இசையும் நடனமும் இணையும் #arrpd6

இது புதிது, சினிமா, திரைத் துளி
பிஹைண்ட்வுட்ஸ் (Behindwoods) தனது அடுத்த முயற்சியாகத் திரைப்படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. அவர்களது முதல் தயாரிப்பில், பிரபு தேவாவையும், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானையும் இணைத்துள்ளனர். இந்தப் பெரும் நட்சத்திரங்கள் இணையும் இப்படத்தை, பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ் NS தயாரித்து, இயக்குகிறார். இந்தியத் திரையிசை மற்றும் நடனத்துறையில் பேராற்றல் மிக்கவர்களான இருபெரும் ஜாம்பவான்களின் கூட்டணி ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் அசத்த உள்ளனர். இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொமுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக இருக்கும் இப்படம் வெகுஜன மக்களை நிச்சயம் ஈர்க்கும் என பிஹைண்ட்வுட்ஸ் நம்புகிறது. இத்திரைப்படத்தில் ரத்தமோ, வன்முறையோ, முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளோ எந்த வடிவத்திலும் இருக்காது என்றும், இந்திய...
பொய்க்கால் குதிரை விமர்சனம்

பொய்க்கால் குதிரை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கதிரவன் எனும் மையக் கதாபாத்திரத்திற்கு, ஒரு விபத்தில் முட்டி வரை இடது கால் போய்விடுகிறது. அவருக்குச் செயற்கைக் கால் பொருத்தப்படுகிறது. தலைப்பு, அந்தச் செயற்கைக் காலைக் குறிக்கிறதே அன்றி, பொய்க்கால் குதிரை ஆட்டம் எனும் கலைக்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. ஒரு தந்தை தன் மகளின் உயிரைக் காப்பதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறார். அதனால் ஒரு கோடீஸ்வரியின் மகளைக் கடத்தி, தனது மகள் மகிழ்க்கு ஆப்ரேஷன் செய்யலாம் என முடிவெடுக்கிறார் கதிரவன். அவர் கடத்தும் முன், வேறு எவராலேயே அச்சிறுமி கடத்தப்பட, பழி கதிரவன் மேல் விழுகிறது. இரண்டு சிறுமிகளும் கதியும் என்னானது, கதிரவன் அவர்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை. ஒரு பெரும் நிறுவனத்தைக் கட்டியாளும் கோடீஸ்வரி ருத்ராவாக வரலட்சுமி சரத்குமார்க்கு மிடுக்கான கதாபாத்திரம். கதையோடு பொருந்தி வரும் பாத்திரம். அவர் சமயத்துக்குத் தக்கவாறு எ...
பொய்க்கால் குதிரை – ஒற்றைக் காலில் நடனமாடிய பிரபுதேவா

பொய்க்கால் குதிரை – ஒற்றைக் காலில் நடனமாடிய பிரபுதேவா

சினிமா, திரைச் செய்தி
‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் “பொய்க்கால் குதிரை”. டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. நடனப்புயல் பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, டி. இமான் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம், இசை மற்றும் ‘பொய்கால் குதிரை’ படம் வெளியாகும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடனப்புயல் பிரபுதேவா, இசையமைப்பாளர் டி. இமான்...
பொய்க்கால் குதிரை – ஆக்ஷன் த்ரில்லர்

பொய்க்கால் குதிரை – ஆக்ஷன் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் “பொய்க்கால் குதிரை”. டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. நடனப்புயல் பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, டி. இமான் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம், இசை மற்றும் ‘பொய்க்கால் குதிரை’ படம் வெளியாகும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடனப்புயல் பிரபுதேவா, இசையமைப்பாளர் டி. இமா...
குழந்தைகளின் அழகான உலகத்தைக் காட்டும் ‘மை டியர் பூதம்’

குழந்தைகளின் அழகான உலகத்தைக் காட்டும் ‘மை டியர் பூதம்’

சினிமா, திரைத் துளி
அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் P. பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை படப்புகழ் N. ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் “மை டியர் பூதம்”. தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் குறைவாக உள்ள ஏக்கதைப் போக்கும் விதமாக ஒரு அழகான ஃபேன்டஸி குழந்தைகள் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் பூதமாக இப்படத்தில் நடித்துள்ளார். ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். ஜூலை 15 ஆம் தேதி, இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் N. ராகவன், “என்னுடைய முதல் படம் மஞ்சப்பை ஒரு ஃபீல் குட் டிராமா. அடுத்த படமான கடம்பன் ஆக்சன் டிராமா. எனக்கு எல்லா ஜானரிலும் படம் செய்ய வேண்டும் என்பது ஆசை. அதனால் அடுத்த படம் என்ன செய்யலாம் என்று யோசித்த போது, குழந்தைகளுக்கான படம் செய்யலாம் எனத் தோன்றியது. தமிழில் குழந்தைகள் உலகைச் சொல்லும் படங்கள் இப்போது அதிகமாக இல்லை. எனவே அதை...
சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓர் இக்கட்டில் மாட்டிக் கொண்டு, அதிலிருந்து தப்பிக்க ஹாலிவுட் சார்லி சாப்ளின் மிகச் சீரியசாக முயலும் அனைத்தும் பார்வையாளர்களுக்கு நகைச்சுவை விருந்தாக அமையும். அதன் அடிப்படையில், 2002இல் வெளிவந்த வெற்றிப்படமான சார்லி சாப்ளினின் மைய இழை அமைந்திருக்கும். 17 வருடங்களுக்குப் பின், சார்லி சாப்ளின் 2 வருகிறது. ஆனால், இது முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லை. ஓர் இக்கட்டில் சிக்கி, அதிலிருந்து மீளப் பார்ப்பதுதான் இப்படத்தின் கருவும். முதல் பாகத்தில் அமர்க்களம் புரிந்த பிரபு, பிரபுதேவா, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் மட்டுமே இரண்டு படத்திற்குமான இணைக்கும் கண்ணி. முதற்பாகத்தைப் போலவே பிரபு பாத்திரத்தின் பெயர் ராமகிருஷ்ணன், பிரபுதேவா பாத்திரத்தின் பெயர் பிரபு. இப்படத்தில் என்ன மாறுதலென்றால், 2002இல் இரண்டு நாயகர்களில் ஒருவரான பிரபு இப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக ப்ரோமோட் ஆகியுள்ளார். பிரபுதேவா இன்னும் அத...
பிரபுதேவாவை இயக்கும் நடன இயக்குநர்

பிரபுதேவாவை இயக்கும் நடன இயக்குநர்

சினிமா, திரைத் துளி
தூத்துக்குடி மற்றும் மதுரை சம்பவம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பிரபல நடன இயக்குநர் ஹரிகுமார், ஸ்டுடியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். "தேள்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். எங்கேயும் எப்போதும், நெடுஞ்சாலை உட்பட பல படங்களில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளர் C.சத்யா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். காட்டேரி படத்தின் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்கிறார். கலை இயக்குநராகச் செந்தில் ராகவனும், சண்டைப்பயிற்சியாளராக அன்பு, அறிவு ஆகியோரும் பணி புரிகிறார்கள். பொன் பார்த்திபன் மற்றும் ஹரிகுமார் இருவரும் இணைந்து வசனம் எழுதியிருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஹரிகுமார். "ஒரு புகழ் வாய்ந்த நடன இயக்குநரை இன்னொரு நடன இயக்குநர...
லக்ஷ்மி விமர்சனம்

லக்ஷ்மி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பிரபுதேவாவைக் கொண்டு ஒரு நடனப்படம் எடுத்தால் எப்படியிருக்கும் என்ற சிறு பொறி லக்‌ஷ்மியாக வளர்ந்துள்ளது. லக்‌ஷ்மி எனும் சிறுமிக்கு நடனம் என்றால் உயிர். எங்கும் எப்பவும் நடனம். தனது அம்மாவிற்குத் தெரியாமல், மும்பையில் நடக்கும் நடனப்போட்டியில் கலந்து கொள்கிறாள். லக்‌ஷ்மியின் கனவு என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் கதாநாயகியாக சிறுமி தித்யா. பேருந்து நிறுத்தத்தில், சாலையில், குளியலறையில், பள்ளியில், பேருந்தில், டீக்கடையில் (Cafe'teria) என ஆடிக் கொண்டே இருக்கிறார். தெய்வத்திருமகளில் சாரா, தியாவில் வெரோனிகா என அவர் ஆடிஷனில் தேர்வாகும் சிறுவர்கள் அனைவரும் உள்ளத்தைக் கவர்பவர்கள். தித்யாவும் தனது நடனத்தால் கவர்கிறார். அவரது முகம் வடக்கத்தைய சாடையாக இருப்பதாலும், அழுத்தமற்ற திரைக்கதையாலும், 'நம்ம பொண்ணு' என்ற உணர்வு எழவில்லை. லக்‌ஷ்மி போட்டியில் ஜெயித்து விடுவாள் என்பது உள்ளங்கை நெல்லி...
லக்ஷ்மி – தி டான்ஸர் தித்யா

லக்ஷ்மி – தி டான்ஸர் தித்யா

சினிமா, திரைச் செய்தி
ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் நடனத் திரைப்படம் 'லக்‌ஷ்மி'. நடனப்புயல் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி 'தித்யா' ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்குச் சமீபத்திய மியூசிக் சென்சேஷன் சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. "லக்‌ஷ்மி என் கனவு திரைப்படம். ஒரு டான்சராக இருந்து விட்டு இந்தத் திரைப்படத்தில் நடித்திருப்பது சிறப்பான அனுபவம். ஐஸ்வர்யா தான் என்னை அழைத்து, 'நீ இந்தப் படம் பண்ணனும்' என்று சொன்னார். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. இந்தப் படத்தில் நடித்த குழந்தைகள் மிகப்பெரிய ஆளாக வருவார்கள்" என்றார் நடிகை ஷோஃபியா. இசையமைப்பாளர் சாம் C.S."இதுவரை நிறைய ஹாரர், த்ரில்லர், மாஸ் திரைப்படங்களுக்கு தான் இசையமைத்திருக்கிறேன். முதன் முறையாக ஒர...
குலேபகாவலி விமர்சனம்

குலேபகாவலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முழு நீள நகைச்சுவைப் படமாக எடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் கல்யாண். குலேபகாவலி கோவில் மதில் சுவரருகே புதைக்கப்பட்டிருக்கும் புதையலை, நான்கு திருடர்கள் இணைந்து கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டுகின்றனர். அவர்களுக்குப் புதையல் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. படத்தின் வகைமை காமெடி என முடிவு செய்து விட்டதால் லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை இயக்குநர் கல்யாண். பி.எம்.டபுள்யூ. கார் வைத்திருக்கும் காவல்துறை அதிகாரி மயில் வாகனமாக சத்யன் நடித்துள்ளார். அவருக்கு வாழ்வில் நான்கு எதிரிகள். அவர்களைப் பழி வாங்குவது தான் அவரது வாழ்நாள் லட்சியமென்பதாக ஒரு தனி அத்தியாயமே வைத்துள்ளனர் படத்தில். சபதத்தை எடுக்கவிட்டு சத்யனைக் கதையில் இருந்து ஓரங்கட்டி விடுகின்றனர் கதையில். இப்படி, கதாபாத்திர அறிமுகங்கள் கோர்வையில்லாமல் தனித்தனியே தொக்கி நிற்கின்றன. காரணம் படத்தில் அத்தனை கதாபா...
தேவி விமர்சனம்

தேவி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
89இல், 'அக்னி நட்சத்திரம்' படத்தில் கோரியோகிராஃபராக அறிமுகமான பிரபுதேவா, 27 வருடங்களுக்குப் பிறகு 'பிரபுதேவா ஸ்டூடியோஸ்' மூலம் தயாரிப்பாளராகவும் உருமாறியுள்ளார். அவரது முதல் தயாரிப்பான ‘சில சமயங்களில்’ படம் சர்வதேச வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கி, இந்தி என மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட 'தேவி' படமோ, ஒரே நாளிலேயே (அக்டோபர் 7) மூன்று மொழிகளிலுமே வெளியாகி, ஒரு புதிய சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகை ஆக முடியாத நிராசையில் தற்கொலை செய்து கொள்ளும் ரூபி, கிருஷ்ணகுமாரின் மனைவி தேவி உடலில் புகுந்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விழைகிறது. தேவியின் நிலையென்ன என்பதும், இந்த இக்கட்டிலிருந்து கிருஷ்ணகுமார் எப்படி மீள்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. விஜயகாந்தோடு பிரபுதேவா நடித்த 'எங்கள் அண்ணா' திரைப்படம் வெளியாகி 12 வருடங்கள் ஆகிறது. பின் இப்பொழுது தான், தமிழ்த் த...
பிரபு தேவாவுடன் இணையும் பாரா கான்

பிரபு தேவாவுடன் இணையும் பாரா கான்

சினிமா, திரைத் துளி
தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல், தெலுங்கு, ஹிந்தி என பல தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று கொண்டிருக்கிறது, பிரபு தேவா - தமன்னா - சோனு சூட் நடிப்பில் விஜய் இயக்கும் DEVI(L) திரைப்படம். பல வருடங்கள் கழித்து மீண்டும் ஹீரோவாக நடிக்கும் பிரபு தேவா, ஹாலிவுட்டின் சிறந்த கதாசிரியர் பவுல் ஆரோன் இந்தப் படத்திற்கு விஜயுடன் இணைந்து கதை எழுதுவது, என பல சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த நட்சத்திரக் கூட்டணியின் DEVI(L) திரைப்படம், தனது முதல் நாளில் இருந்தே பலரின் ஆர்வத்தைத் தூண்டி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தப் படத்தை பற்றிய தகல்வல்கள் யாவும் காட்டுத்தீ போல் அனைவரிடத்திலும் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவின் முன்னணி நடன இயக்குநரான பாரா கான், இவர்களுடன் இணைந்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. நடன இயக்குநராக மட்டுமில்லாமல் ப...