Shadow

Tag: பிரஷாந்த் பாண்டியராஜ்

கருடன் சூரி – விலங்கு இயக்குநர்

கருடன் சூரி – விலங்கு இயக்குநர்

சினிமா, திரைத் துளி
கதையின் நாயகனாக உயர்ந்து, வெற்றி வாகை சூடி இருக்கும் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கருடன் படத்தைத் தொடர்ந்து, லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் புதிய திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை 'விலங்கு' எனும் இணைய தொடரை இயக்கி அனைவரது கவனத்தையும் கவர்ந்த இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சூரி, பிரசாந்த் பாண்டியராஜ், லார்க் ஸ்டுடியோஸ் கே. குமார் ஆகியோர் ஒன்றிணைந்திருப்பது, இந்தப் படத்தின் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது....