Shadow

Tag: பிரியங்கா மோகன்

ஜீ5 இல் ஸ்ட்ரீமாகிறது ‘பிரதர்’ திரைப்படம்

ஜீ5 இல் ஸ்ட்ரீமாகிறது ‘பிரதர்’ திரைப்படம்

OTT, இது புதிது, சினிமா
ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான் ‘பிரதர்’ திரைப்படம் ஜீ5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. கமர்ஷியல் காமெடிப் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ள ‘பிரதர்’ திரைப்படத்தில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து, குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான இப்படம், தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களை மிகவும் கவர்ந்த இப்படம் தற்போது ஜீ5 தளத்தில் நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இயக்குநர் ராஜேஷ் M, “பிரதர் திரைப்படம் மனதிற்கு மிகவும் நெருக்கமான படைப்பு. திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்கள் தந்த வரவேற்பு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் ஜெயம் ரவியை இயக்கியது மி...
ஒன்பது நாடுகளில் டிரெண்டிங்  ஆகும் “கேப்டன் மில்லர்”

ஒன்பது நாடுகளில் டிரெண்டிங் ஆகும் “கேப்டன் மில்லர்”

சினிமா, திரைச் செய்தி
அமேசான் ப்ரைம் தளத்தில், பிப்ரவரி 9 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான, சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், 40 நாட்களைக் கடந்தும், உலகளவில் ஒன்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இவ்வருட பொங்கல் கொண்டாட்டமாக, ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "கேப்டன் மில்லர்" ஆகும். இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இப்படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நட...
சூர்யா: நடிப்பு நாயகன் – புரட்சி நாயகன்

சூர்யா: நடிப்பு நாயகன் – புரட்சி நாயகன்

சினிமா, திரைச் செய்தி
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் முன்னோட்டம் மார்ச் 2 அன்று வெளியிடப்பட்டது. நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், வினய், சூரி, நடிகை பிரியங்ககா மோகன், இசையமைப்பாளர் டி. இமான், படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினருடன் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகை பிரியங்கா மோகன், ''படப்பிடிப்பின் முதல் நாளே காதல் காட்சி என...
டாக்டர் விமர்சனம்

டாக்டர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நோயாளிகளைக் காப்பாற்ற அறுவை சிகிச்சைக்காகக் கத்தியைப் பிடிக்கும் மருத்துவர், ஒரு கடத்தல் கும்பலை எதிர்கொள்ள நேருகிறது. தன்னை வேண்டாம் என்ற நிராகரித்த பெண்ணின் வீட்டில் ஒரு குழந்தை கடத்தப்படுகிறது. அந்த வீட்டிற்கு சிவகார்த்திகேயன் உதவச் செல்கிறார். ஆனால் கடத்தப்பட்டிருப்பது ஒரு குழந்தை அல்ல பற்பல எனத் தெரிய வருகிறது. அவர்களை எல்லாம் சிவா எப்படி மீட்டார் என்பதுதான் படத்தின் கதை. ஸ்மார்ட்டான சிவகார்த்தியன், துளியும் அலட்டல் இல்லாத நேர்த்தியான நடிப்பை கொடுத்திருக்கிறார். மறந்தும் கூட பன்ச் வசனம் வைக்கவில்லை. சிறப்பு. பிரியங்கா அருள்மோகன் அழகோ அழகு. அவரையும் சரியாகக் கதைக்குள் பொருத்தி இருப்பதால் அவர் கொஞ்சமே நடித்தாலும் நன்றாகவே இருக்கிறது. கிங்ஸ்லியும் யோகிபாபுவும், டாக்டர் படத்தின் திரைக்கதைக்கு அனுபவம் வாய்ந்த செவிலியர்களாக இருந்து படத்தைக் காப்பாற்றுகிறார்கள். வினய் நடிப்பும் சரி அவரது மே...