டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆரின் ரிக்ஷாக்காரன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த 'ரிக்ஷாக்காரன்' திரைப்படம் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பல விதங்களில் ஸ்பெஷலானது. ஆர்.எம்.வீரப்பன் தனது சத்யா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து எடுத்த ஐந்தாவது படம் இது.
சிறப்பான கதையம்சமும், இனிமையான பாடல்களும், எம்.ஜி.ஆர் அவர்களின் ஸ்டைலான நடிப்பும், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து, 1971 ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே 'ரிக்ஷாக்காரன்' திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இந்தப் படத்தில் மூலம் தான் மஞ்சுளா கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அசோகன், மேஜர் சுந்தரராஜன், மனோகர், தேங்காய் சீனிவாசன், சோ, பத்மினி என்று படத்தில் நட்சத்திரப் பட்டாளம் இருப்பது மட்டுமல்ல, அவர்களது கதாபத்திரங்களும் சிறப்பாக அமைந்து நவரசங்களை வெளிப்படுத்தின.
"அங்கே சிரிப்பவர்க...