தொட்டால் தொடரும் விமர்சனம்
நாயகி எதைத் தொட்டதால் என்ன தொடர்கிறது என்பதே படத்தின் கதை.
காதல், அதனால் எழும் ஊடல், மெகா சீரியலில் காட்டப்படும் குடும்பப் பிரச்சனை, தமிழ்த் திரைப்படங்களின் ஆதிகாலம் தொட்டே வரும் சித்தி கொடுமை, மொக்கை போட்டே சாகடிக்கும் நாயகனின் நண்பன், கொல்லத் துரத்தும் வில்லன் என அக்மார்க் தமிழ்ப்படத்துக்குரிய சகல விஷயங்களையும் ஒன்று விடாமல் காட்சிப்படுத்தியுள்ளார் கேபிள் சங்கர். இதில் புதுமை எனப் பார்த்தால், வில்லனாக வரும் வின்சென்ட் அசோகன் ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மிரட்டியுள்ளார்.
படத்தின் தொடக்கத்திலேயே பாத்திரங்களைச் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஹீரோக்கு அநாவசியமான அறிமுகப் பாடல் கிடையாது; நாயகியும் லூசு போலவோ, கவர்ச்சி உடையிலோ அறிமுகமாகவில்லை. நாயகனைக் காதலிக்க மட்டுமே அவர் படத்தில் இல்லை. துக்கம், மகிழ்ச்சி, பொறுப்புணர்ச்சி, குறும்புத்தனம், கோபதாபமுள்ள பெண்ணாக உள்ளார் நாயகி. ஆனால் படத்த...