Shadow

Tag: பி.சி.ஸ்ரீராம்

ரெமோ லட்டு

ரெமோ லட்டு

சினிமா, திரைச் செய்தி
"என்னை இந்தப் படத்தில் நாயகியா நடிக்க வச்சா சரியா பொருந்தும்னு பரிந்துரை செய்தது பி.சி.ஸ்ரீராம் சார் தானென பாக்கி (பாக்கியராஜ் கண்ணன்) சொன்னார். அவருக்கு ரொம்ப நன்றி. எங்கப்பாம்மா என்னைச் சுலபத்தில் பாராட்டிட மாட்டாங்க. ஆனால், திரையரங்கில் ரெமோ பார்த்துட்டு “லட்டு மாதிரி இருக்க!” எனப் பாராட்டினாங்க. இந்தப் பாராட்டு, பி.சி.ஸ்ரீராம் சாரோட கேமிரா மேஜிக்கால் தான் நடந்தது” என்றார் ரெமோ படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ். “என்னிடம் படத்தைப் பற்றிப் பேசுறவங்க, அந்த பிங்க் சேலையில் ரொம்ப அழகா இருந்தீங்க. எங்க வாங்குனீங்க எனக் கேட்கிறாங்க. ‘அடப்பாவிகளா! அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்? காஸ்ட்யூமர் அனு பார்த்தசாரதி மேடமைக் கேளுங்க’ன்னு சொல்லிட்டு வர்றேன். அவ்ளோ அக்கறையாகப் பார்த்துப் பார்த்து எனக்கு எது நல்லாயிருக்கும்னு உடை வடிவமைத்துக் கொடுத்த அவங்களுக்கு நன்றி. யாராச்சும் நான் அழகுன்னு சொன்னா ந...
ரெமோ விமர்சனம்

ரெமோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருத்துவர் காவ்யா மீது கண்டதும் காதல் கொள்கிறான் நடிகராகும் முயற்சியிலுள்ள எஸ்.கே. காதலில் வெற்றியடைய வேலையில்லா எஸ்.கே. எடுக்கும் தொடர் முயற்சிகள் தான் படத்தின் கதை. வழக்கமான ரோட் சைட் ரோமியோ தான் எஸ்.கே.வும். எதைப் பார்த்து ‘லவ்’ வந்தது என தமிழ்ப்பட நாயகனிடம் கேட்டால், ‘முகத்தைப் பார்த்து லவ் பண்ணலை. மனசைப் பார்த்து லவ் பண்ணேன்’ எனச் சொல்வார்கள். ‘ஏன் லவ் ஃபெயிலியர் ஆச்சு?’ எனக் கேட்டால், ‘இந்தப் பொண்ணுங்க மனசைப் புரிஞ்சுக்கவே முடில’ என பாரில் (Bar) பெண்களைத் திட்டிப் பாட்டு பாடுவார்கள். முதலில் என்ன புரிந்ததோ, பின் என்ன புரியாமல் போனதோ?? தமிழ்ப் பட இயக்குநர்களுக்கே வெளிச்சம்! ஆனால், இப்படத்தில் எஸ்.கே.விற்குக் காவ்யாவின் முகத்தைப் பார்த்தோ, மனதைப் பார்த்தோ காதல் வருவதில்லை. மன்மதன் (Cupid) அம்பெய்து காதல் வரச் செய்து விடுகிறார். அதுவரை பெண்கள் விஷயத்தில் எஸ்.கே. சின்னத் தம்பி பிரபு போல...
ஐ விமர்சனம்

ஐ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்றாகிவிட்டது. அதை ஐ படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார். தியாவுக்கும் லிங்கேசனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், லிங்கேசனின் அழகையும் உடற்கட்டையும் ஐவர் கூட்டணி இணைந்து உருக்கலைக்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை. அந்நியன் அம்பி கூவக்கரையில் பிறந்தால் எப்படியிருக்கும்? அதுதான் லீ எனும் லிங்கேசன். ஆனால் விக்ரமுக்கு சென்னைத் தமிழ்தான் கொஞ்சம் ஒட்டவில்லை. கட்டுடல், மெல்லுடல், கோர முகமென விக்ரம் அபிரிதமான உழைப்பைக் கொட்டியுள்ளார். சுமார் இரண்டே முக்கால் வருட தவம் இவருக்கு! எல்லாத் தவத்திற்கும் வரம் கிடைத்துவிடுவதில்லை என்பதுதான் துரதிர்ஷ்டமான விஷயம். அந்நியனில், மல்டிபிள் பெர்ஸனாலிட்டி செய்த வேலையை இப்படத்தில் நாயகியும் வில்லன்களும் செய்கின்றனர். அம்பியை நாயகியே ரெமோவாக்குகிறாள்; வில்லன்கள் அந்நியன் ஆக்குகின்றனர். தியாவாக எமி ஜாக்சன். ஷங்கர்...