காக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்
சமீபத்தில் யோகிபாபு நடித்த காக்டெய்ல் என்கிற படம் Zee5 தளத்தில் வெளியானது. இதில் யோகிபாபுவின் நண்பனாக ஏஜென்ட் என்கிற பாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் கவின். ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும், காக்டெய்ல் இவருக்கு நிரந்தர முகவரியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
சினிமாவில் தான் நுழைவதற்கு நடத்திய போராட்டம் முதல் காக்டெய்ல், அடுத்ததாக வெளியாக இருக்கும் டேனி வரையிலான படங்களில் நடித்த அனுபவம் குறித்து பற்றிப் பகிர்ந்துகொண்டார் கவின்.
“மதுரையில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் நான். ஆனால் படிப்பு ஏறாததால் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டேன். சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தை வீட்டில் சொன்னபோது பயங்கர எதிர்ப்பு எழுந்தது.
அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக வாரத்தில் ஐந்து நாட்கள் வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டு மீதி இரண்டு நாட்கள் கார் எடுத்துக் கொண்டு மதுரை பகுதிகளில் நட...