RC 16க்காக ராம்சரண் – புச்சிபாபு சனா கூட்டணியில் இணையும் ஜான்வி கபூர்
'குளோபல் ஸ்டார்' ராம்சரண் -புச்சி பாபு சனா- வெங்கடா சதீஷ் கிலாறு - விருத்தி சினிமாஸ் -மைத்ரி மூவி மேக்கர்ஸ்- சுகுமார் ரைட்டிங்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான #RC16 படத்தில் பாலிவுட் நடிகையும், பேரழகியுமான ஜான்வி கபூர் இணைந்திருக்கிறார்.
'குளோபல் ஸ்டார்' ராம்சரண் அடுத்ததாக 'உப்பென்னா' புகழ் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக உருவாகும் #RC16 படத்தில் நடிக்கிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு தயாரிப்பாளராக களம் இறங்குகிறார். அவருடைய விருத்தி சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாராகிறது.
இந்த திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். இன்று அவரது பிறந்தநாள் என்பதால், அவரை ப...