நவீன உலகத்தின் நன்னெறி
ஜனவரி 30, 2017 அன்று, மூன்றாம் ஆண்டு திரு. S.V.நரசிம்மன் நினைவுப் பேருரை விழாவை மயிலாப்பூரிலுள்ள ‘பாரதீய வித்யா பவன்’ ஏற்பாடு செய்திருந்தது. ‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற கருத்தியலையும், ‘உயர்ந்த சிந்தனைகள் எல்லாப் பக்கங்களில் இருந்தும் நம்மிடம் வரட்டும்’ என்ற குறிக்கோளும் உடையது பாரதீய வித்யா பவன். தங்கள் கருத்தியலையும் குறிக்கோளையும் பிரதிபலிக்குமாறு விருந்தினர்களைத் தேர்வு செய்திருந்தனர். அவர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசராகப் பணி புரிந்தவரான மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் திரு.M.K.நாராயணனும், புகழ்பெற்ற புத்த பிட்சுவான திரு. சாம்தாங் ரின்போச்சேவும் ஆவர்.“சீன அரசாங்கம் தவத்திரு தலாய் லாமாவைத் திபெத்தில் இருந்து வெளியேறச் சொன்ன பொழுது, இந்தியா சார்பாக வரவேற்றதில் நானுமொருவன். அவருடன் வந்திருந்த குழுவில், தலாய் லாமாவின் நம்பிக்கைக்குரிய சாம்தாங் ரின்போச்சேவும் ஒருவர். தலாய் லாமா கேட்டுக்...