Shadow

Tag: பூக்கள் விற்பனைக்கல்ல

பூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்

பூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்

புத்தகம்
அமேசான் நடத்தும் Pen To Publish போட்டிக்காக ஹேமா ஜே அவர்களால் எழுதப்பட்ட நாவல் “பூக்கள் விற்பனைக்கல்ல”. குடும்ப நாவல் வகையைச் சேர்ந்த கதை. பொதுவாகக் குடும்ப நாவல்களை எழுதுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பெரும்பாலும் பெண் வாசகிகள் அதிகமாக இருக்கும் இந்த வகை பிரிவில், காதலையே பல்வேறு விதமாய்க் கொடுத்தாலும் அதை ரசித்துப் படிக்க விரும்பும் வாசகி / வாசகர்களுக்கு என்ன விதமான புதுமையான முயற்சிகளைத் தந்து விட முடியும் என்ற எழுத்தாளர்களின் உளவியல் திறமை சார்ந்த ஒன்று அது. காதலைத் திகட்டத் திகட்டக் கொடுத்தும், இன்னும் பத்தாமல் போதலை போதலை என்று துடிக்கும் இரண்டு துறை இருக்கிறதென்றால், அது ஒன்று சினிமா, இன்னொன்று இந்தக் குடும்ப நாவல்கள் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவைப் போன்றே இந்தக் குடும்ப நாவல் பிரிவிலும் அதை, அதன் டெம்ப்ளேட்டிலிருந்து வெளியே எடுத்து வந்து விட வேண்டும் என்று பல எழுத்தாளர்கள் தொ...