Shadow

Tag: பூமிகா

யு டர்ன் விமர்சனம்

யு டர்ன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கன்னடத்தில், 2016 ஆம் ஆண்டு பவண் குமார் எழுதி இயக்கிய 'யு டர்ன்' எனும் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. 2017இல், மலையாளத்தில் 'கேர்ஃபுல்' என்ற பெயரில், இயக்குநர் V.K.பிரகாஷால் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பவண் குமாரே தமிழிலும், தெலுங்கிலும் இப்படத்தை மறு உருவாக்கம் செய்துள்ளார். வேளச்சேரி மேம்பாலத்தில், சாலையின் நடுவே உள்ள கற்களை நகர்த்திவிட்டு, விதிகளுக்குப் புறம்பாக யு எடுக்கும் வாகன ஓட்டிகளைப் பேட்டி எடுக்க முயல்கிறார் பயிற்சி நிருபரான ரட்சனா. ஆனால், அப்படி யு டர்ன் எடுத்த அன்றே அவ்வனைவருமே தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுகின்றனர். அது தற்கொலையா, கொலையா என்று, நாயக் எனும் காவல்துறை அதிகாரியின் உதவியோடு துப்புத் துலக்குகிறார் ரட்சனா. வேளச்சேரி மேம்பாலத்தில், யு டர்ன் எடுத்தவர்களின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதே படத்தின் கதை. பார்வையாளர்களுக்கு, முழு நீள த்ரில...
M.S.தோனி விமர்சனம்

M.S.தோனி விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இந்திய அணிக்கு மட்டுமில்லாமல், ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’-க்கும் கேப்டனாக இருந்து, தமிழ் ரசிகர்களுக்கு மேலும் நெருக்கமானவர் நாயகன் தோனி. தமிழகத் திரையரங்குகளில் ரசிகர்கள் ‘விசில் போட்டு’ உற்சாகத்தில் மிதக்க இந்தவொரு காரணம் போதாதா? பயோபிக் வகை படமென இதைக் கூற முடியாது. அவர்களே தெளிவாகக் குறிப்பிட்டும் விடுகின்றனர். நாயகனை வியந்தோதும் மற்றுமொரு இந்தியப் படமே! ஆனால், சமகால விளையாட்டு வீரரைப் பற்றிய படம் என்பதே அனைத்து விசேஷங்களுக்குமான காரணம். இந்தப் படம், அதீத பாசிடிவ் எனர்ஜியைத் திரையரங்குகளில் பரப்புகிறது. தோனியின் வெற்றி என்பது இந்திய அணியின் வெற்றி, இந்தியாவின் வெற்றி எனப் படம் முடிந்தாலும், இது தோனி மீது நம்பிக்கை வைத்திருந்த அவரது நண்பர்களின் வெற்றியாகவே மனதில் ஆழப் பதிகிறது. ‘தோனி கீப்பிங்கிற்கு சரிபடுவான்’ எனக் கணிக்கிறார் அவரது பயிற்சியாளர். இந்தியா உலகக் கோப்பையை வெல்லும்பொழுது, க...