Shadow

Tag: பூர்ணா

டெவில் விமர்சனம்

டெவில் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆண் பெண் இருபாலருக்குமான உறவுநிலைச் சிக்கலை சிக்கலே இல்லாமல், சிரத்தையும் இல்லாமல், த்ரில்லர், தத்துவார்த்தம், ஆன்மீகம் என பல தளங்களின் வழியே பேச முயன்றிருக்கும் திரைப்படம் தான் டெவில்.டெவில் என்கின்ற தலைப்பிற்கான நேரடியான விளக்கங்களோ, பூடகமான விளக்கங்களோ கதை மற்றும்  திரைக்கதையில் இல்லை.  நாம் கதையாடலை மையமாகக் கொண்டு, மானசீகமாக எல்லோர் மனதிற்குள்ளும் ஒளிந்திருக்கும் சாத்தான் என்று சொல்ல முற்பட்டால்,  மணம் தாண்டிய உறவுகளையும் அந்த உணர்வு நிலைகளையும் நாம் சாத்தானாக உருவகப்படுத்திகிறோம் என்கின்ற தவறான பொருள் கொள்ளல் தோன்றும். எனவே அதைத் தவிர்த்து  நாயகன் விதார்த்தின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி, இந்த டெவில் என்பதன் அர்த்தத்தை ஆணின் மனதிற்குள் ஒளிந்திருக்கும் கயமை என்று பொருள் கொள்ளலாம்.தான் தவறிழைக்கும் போது அதை மன்னிக்கக் கூடிய குற்றமாகக் கருதி , எதிர்பாலாகிய மனைவியிடமோ அல்லது காதல...
”பூர்ணா என் தாய் போன்றவள்” – மிஷ்கின்

”பூர்ணா என் தாய் போன்றவள்” – மிஷ்கின்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.  சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்” என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் வகைத் திரைப்படமான “டெவில்” பிப்ரவரி 2ல் வெளியாகவிருக்கும் நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.இதில் தயாரிப்பாளர் ஹெச் பிக்சர்ஸ் ஹரி பேசும்போது, ”மிஷ்கின் என்னுடைய குருநாதர் போன்றவர். நான் சினிமாவில் பார்த்து வியக்கும் ஆளுமைகளில் அவர் ஒருவர். அவருக்கு முதல் நன்றிகள். இந்த படத்தின் சப்ஜெக்ட் வித்தியாசமாக இருந்தது. இயக்குநர் ஆதித்யா படத்தின் ...
”சேருமிடம் ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் பாதங்களே!” – மிஷ்கினின் இசைப்பயணம்

”சேருமிடம் ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் பாதங்களே!” – மிஷ்கினின் இசைப்பயணம்

சினிமா, திரைச் செய்தி
மாருதி ப்லிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “DEVIL” . சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் போது, ”இந்த உலகத்தில் இருக்கிற எல்லா விசயங்களையும் குறித்து கருத்து சொல்பவன் நான், ஆனால் ஒன்றைக் குறித்துப் பேச மட்டும் எனக்குத் தகுதியில்லை என்று கூறினால் அது கண்டிப்பாக இசை குறித்துத்தான். ஏனென்றால் எனக்கு இசையைப் பற்றி ஒன்றும...
சவரக்கத்தி விமர்சனம்

சவரக்கத்தி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முழு நீள பிளாக்-காமெடி படமாகச் சிரிக்க வைக்கிறது சவரக்கத்தி. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் மிஷ்கினின் தம்பி G.R.ஆதித்யா. முடி திருத்துபவரான பிச்சை தனது குடும்பத்துடன் ராஜ்தூதில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அவர்களைப் பரோலில் வந்த மங்கா எனும் கொலையாளியின் கருப்பு ஸ்கார்பியோ லேசாய்த் தட்டி விடுகிறது. பிச்சை தனது குடும்பத்தினர் முன் பந்தாவாக ஸ்கார்பியோவில் வந்தவர்களை வம்புக்கு இழுத்து விடுகிறார். கிறுக்கனான மங்கா, பிச்சையைக் கொன்றே தீர்வதென அவரைத் தேடுகிறார். பிச்சை மங்காவிடம் சிக்கினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. ஒரே நாளில் நிகழும் படம். மிக எளிமையான ஒரு வரிக் கதை. ஒருவன் கொல்லத் துரத்துகிறான்; மற்றொருவன் தப்பிக்கப் பார்க்கிறான். பயந்து ஓடும் பிச்சைக்கு, காது கேளாத கர்ப்பிணி மனைவியும் இரண்டு அழகான குழந்தைகளும் உள்ளனர். பிச்சையாக இயக்குநர் ராம் நடித்துள்ளார். ஒர...
கொடிவீரன் விமர்சனம்

கொடிவீரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொடிவீரன் எனும் பெயர் கொண்ட சாமியாடியின் அருள்வாக்கு பலிதம் ஆகிறது. தீர்க்கதரிசணங்கள் நிகழ்ந்தே தீரும் என்ற மனிதனின் ஆதி நம்பிக்கை தான் படத்தின் மையச் சரடு. வீரன் என்பதை நாயகன் கொடிவீரன் என்றும், கொடி என்பதை அவன் மனம் கவர்ந்த மலர்க்கொடி என்றும் கூடத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். ஆனால், கொடிவீரனுக்கும் அவன் தங்கை பார்வதிக்கும் உள்ள பாசப்பிணைப்புத்தான் கொடிவீரன் படத்தின் கதை. பெண் கதாபாத்திரங்களை வழிபாட்டுக்குரியவர்களாகத் தன் படைப்புகளில் சித்தரித்து வருபவர் இயக்குநர் முத்தையா. இந்தப் படத்தின் தொடக்கமும் அப்படியொரு உணர்வுபூர்வமான அத்தியாயமே! ரத்தினச் சுருக்கமாய், அது பல விஷயங்களைப் பேசி விடுகிறது. சமூகத்தில் வேர் விட்டிருக்கும் ஆணாதிக்க மனோபாவம், குற்றவுணர்வின்றி அதைப் பெருமையாகக் கருதும் ஆண்கள், அத்தகைய ஆண்களுக்குத் துணையாக இருக்கும் 'ஆம்பளடா!' கடவுள்கள் என அந்தக் காட்சிகளில் பொதிந்திருக்...