கலைச்செல்வி – தடை அதை உடை | எட்டாங்கிளாஸ் டூ Ph.D
"உயரம் தொட்டவங்க பலரும் பள்ளத்துல இருந்து வந்தவங்களாத்தான் இருக்காங்க" என்பதற்கு மற்றொரு உதாரணமா இருக்குறா எங்கள் காஞ்சிப்பள்ளத்துப் பதியின் நிர்வாகி பார்வதியம்மாவின் மகள்வழி பேத்தி கலைச்செல்வி.
"பெயர்லே கல்விக்கடவுள் இருக்குறதால அவளுக்குக் கல்வி கடல் மாதி வரும்"னு சொன்னாங்க. அப்படி வந்த கல்வி ஒன்னும் ஈசியா வந்திடல. கலைச்செல்வியை எனக்கு அவ எட்டாங்கிளாஸ் படிக்கறப்பவே தெரியும். கலகல பேச்சுக்குச் சொந்தக்காரி. 12ஆம் வகுப்பு வரைக்கும் சின்ன காஞ்சிபுரத்துல இருக்குற BMS லேடிஸ் ஸ்கூல்ல தான் படிச்சா. அப்பா இரும்புக்கடைல லோடு சுமப்பார். அம்மா வீட்ல பீடி சுத்துவாங்க. ஒரு அக்கா, ஒரு தம்பி. இதான் கலைச்செல்வி குடும்பம். வயிற்றுக்கும் வாய்க்கும் இடைப்பட்ட கேப்ல அவளோட படிப்புச் செலவும் நடக்கும்.
+12 முடிச்சதும் சொந்தத்துலே கல்யாணம் முடிக்க சூழல் வந்துச்சு. "கல்யாணத்துக்குப் பிறகும் என்னைப் படிக்க வைக்கண...