Shadow

Tag: பேய்

க்ரிம்ஸன் பீக் விமர்சனம்

க்ரிம்ஸன் பீக் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
க்ரிம்ஸன் பீக் என்றால் செவ்வண்ண முகடு எனச் சொல்லலாம். எடித் சிறுமியாக இருக்கும்பொழுதே, அவளது இறந்த தாயின் ஆவியால், ‘செவ்வண்ண முகடு’க்குப் போகாதே என எச்சரிக்கப்படுகிறாள். யுவதியாக வளர்ந்த பின்பாகவும், எடித்தை அவளது தாயின் ஆவி மீண்டுமொரு முறை எச்சரிக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக கல்யாணமாகிச் செல்லுமிடம் செவ்வண்ண முகடெனத் தெரியாமலேயே அங்குப் போய் விடுகிறார். பின் என்னானது என்பதே படத்தின் கதை. ‘அலேர்டல் ஹால்’ என்ற தனித்து நிற்கும் மாளிகையை, உள்ளூர் மக்கள் செவ்வண்ண முகடு என அழைக்கின்றனர். செம்மமண் நிறைந்த தரை மீது பனி பொழியும் கலவையான இடத்தில் அமைந்த மாளிகையை அவர்கள் அப்படி அழைக்கின்றனர். இந்த உண்மை எடித்துக்குத் தெரிய வரும் முன்பே, எல்லாம் கை மீறிப் போய்விடுகிறது. போதிய பணமின்றி செப்பனிடாத காரணத்தால், தாமஸ் ஷார்ப்பின் மாளிகையான க்ரிம்ஸன் பீக்கின் தோற்றமே அச்சுறுத்தும் விதமாய் விசித்திரமா...
அன்புக்காக ஏங்கி அலையும் டெய்சி

அன்புக்காக ஏங்கி அலையும் டெய்சி

சினிமா, திரைத் துளி
டெய்சி என்ற எட்டு வயது குழந்தையின் பாசத்தை எடுத்துக் கூறும் இக்கதை சமீபத்திய திகில்/ பேய் படங்களிலிருந்து பெரிதும் வித்திசயமாய் உருவாகியுள்ளது. உண்மையான நிகழ்வுகளை மையமாக வைத்து செண்டிமென்ட் - திகில் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம். எம்.ஆர்.கே. உடன் இணைந்து கதை இயற்றி இயக்குநராக அறிமுகமாகும் ஸ்ரீநாத் ராமலிங்கம், தனது படத்தைப் பற்றிக் கூறுகையில், "ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின் வாழ்க்கை என்னும் சுவரை அலங்கரிக்கும் சித்திரமே. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோரின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் ஜனிக்கின்றனர் என்ற கூற்றை உறுதிபடுத்தும் கதை இது. டெய்சி அன்புக்காக ஏங்கி அலைபாயும் ஒரு உக்கிரமான எட்டு வயது சிறுமியின் ஆவியைப் பற்றிய கதை. நிஜ வாழ்க்கையில் நான் பார்த்து அறிந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையே டெய்சி. இன்றைய குடும்பங்களுக்குத் தேவையான...