Shadow

Tag: பொன்மகள் வந்தாள்

பொன்மகள் வந்தாள் விமர்சனம்

பொன்மகள் வந்தாள் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகள் மீது நடக்கப்படும் பாலியல் வன்முறையினால், அக்குழந்தைகளுக்கு ஏற்படும் வாழ்நாள் மன அதிர்ச்சியைப் (mental trauma) பற்றிப் படம் பேசுகிறது. போலீஸ் எப்படி பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாகச் சோடிக்கும் என்பதையும் படம் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது. இரட்டைக் கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட ஜோதியை, சைக்கோ என முத்திரை குத்தி, 2004 இல் என்கவுண்ட்டர் செய்து விடுகிறது போலீஸ். அந்த வழக்கை மறுவிசாரணைக்குக் கொண்டு வருகிறார் பெட்டிஷன் பெத்துராஜ். இறந்துவிட்ட ஜோதிக்கு ஆதரவாக வெண்பா எனும் வக்கீல் களமிறங்க, 15 வருடத்துக்கும் முன் நிகழ்ந்த உண்மையைப் பார்வையாளர்களுக்குக் கதையாகச் சொல்கிறார் வெண்பா. வெண்பாவாக ஜோதிகா நடித்துள்ளார். பாதி படத்திற்கு மேல், நீதிபதியாக வரும் பிரதாப் போத்தனை, விஜய் டிவி ஜட்ஜ் என நினைத்துக் கொண்டு ஜோதிகா அழுது தீர்க்கிறார். படத்தின் சீரியஸ்னஸை அது நீர்த்துப் போகச் செய்கிறது. 'அந்தக...
பொன்மகள் வந்தாள் – 2 கோடி பார்வைகள்

பொன்மகள் வந்தாள் – 2 கோடி பார்வைகள்

சினிமா, திரைத் துளி
அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூட்யூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் 'பொன்மகள் வந்தாள்' தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரைப் பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்தியச் சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது. இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில், ஒரே நேரத்தில், கிட்டத்தட்ட 1.4 கோடி* மக்களை இந்த ட்ரெய்லர் சென்...
“நான் என்னை ஹீரோவாக உணர்கிறேன்” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

“நான் என்னை ஹீரோவாக உணர்கிறேன்” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

சினிமா, திரைத் துளி
ஓடிடி (OTT) பிளாட்ஃபாரத்தில் நேரடியாக வெளியாகும் முதல் இந்திய மெயின்ஸ்ட்ரீம் திரைப்படம் என்ற பெருமையைப் 'பொன்மகள் வந்தாள்' பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பினைத் தூண்டியுள்ள இந்தப் படத்தைப் பற்றி ஜோதிகா, "இது ஒரு சமூக அக்கறையுள்ள கதை. த்ரில்லர் படம் என்பதால் என்ன சமூக அக்கறை என்பதை சொல்ல முடியாது. இந்தப் படத்தில்  5 இயக்குநர்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கடந்த படத்தில் ரேவதி மேடம், ஊர்வசி மேடம் இந்தப் படத்தில் பார்த்திபன் சார், பாக்யராஜ் சார், தியாகராஜன் சார் ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அனைவரிடமும் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர்கள் எப்படித் தங்களுடைய கதாபாத்திரத்துக்குத் தயார் செய்து கொள்கிறார்கள், நீளமான வசனத்தை எப்படி சரியாக உச்சரித்து நடிக்கிறார்கள் உள்ளிட்ட விஷயங்களை ஒரு நடிகையாகக் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் 3 - 4 நீளமான வசனக் காட்சிகள் இருக்க...