போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 8
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 7போதி தர்மர் என்பவரை அடையாளப்படுத்திய ஏ.ஆர்.முருகதாசின் படம், 'நோக்கு வர்மம்' என்ற கலையையும் சேர்த்து பிரகடணப்படுத்தியது. ஆனால் அப்படம் போதி தர்மர் என்ற பெயரைத் தவிர்த்து அவரைப் பற்றிய எள்ளளவு குறிப்புகளையும் ஆவணப்படுத்தவில்லை. ஆக இவ்விஷயத்தில் சீனர்களின் நேர்மையைப் பாராட்டியே ஆக வேண்டும். ஏழாம் அறிவு படத்தில் முதல் 20 நிமிடங்கள் சித்தரிக்கப்பட்டுள்ள போதி தர்மர் அப்பட்டமான கற்பனை. போதி தர்மரை உணவில் விஷம் வைத்து சீனர்கள் கொன்றனர் என்பது மிகவும் அருவருக்கத்தக்க அல்லது கேவலமான புனைவு. பிரதான சீடரான வெய் ஹூவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு போதி தர்மர் இந்தியாவிற்கு கிளம்பி விட்டார். ஆனால் போதி தர்மர் மீண்டும் இந்தியாவிற்கு வந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. அதற்கு இரண்டுக் காரணங்கள் இருக்கலாம்.ஒன்று போதி தர்மர் இந்தியாவை விட்டு சீனாவிற்கு சென்ற ஆதாரமே நம்மிட...