Shadow

Tag: போஸ் வெங்கட்

SIR விமர்சனம்

SIR விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வாத்தியார் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானத்தின் தாத்தாவும் அப்பாவும் ஆசிரியராக இருந்தவர்கள். கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும், கல்வியே எல்லாத் தளைகளில் இருந்தும் விடுதலை அளிக்கும் என உயர்ந்த லட்சியத்துடன் 1950 களில், ஒரு பள்ளியைத் தொடங்குகிறார் சிவஞானத்தின் தாத்தா. அவர் விட்ட வேலையைச் சிரமேற்கொண்டு ஆத்மார்த்தமாக ஆசிரியப் பணியைச் செய்கிறார் சிவஞானத்தின் அப்பா. உயர்நிலைப்பள்ளியாக உயர்த்த அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வியர்த்தமாகிறது. தந்தை மற்றும் தாத்தாவின் கனவை அறியாத சிவஞானம், ஊரை விட்டு மாற்றலாகிச் சென்றுவிட நினைக்கிறார். தன் குடும்பம் எதற்காகப் போராடுகிறது என உணரும் சிவஞானம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் படத்தின் அடிநாதம். ஒருவரை ஒடுக்கித் தங்கள் ஆளுகைக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமென்றால், அவர்கள் மனதில் மூடநம்பிக்கைகளை விதைத்து, அவர்களுக்குக் கல்வியறிவு கிடைக்காமல் பார்த்துக் கொ...
நந்திவர்மன் விமர்சனம்

நந்திவர்மன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பல்லவர் காலத்தில் செஞ்சி நகரை ஆண்டு வந்த நந்திவர்மன் என்கின்ற அரசன், தன் ஊரை கொள்ளையிட வந்த கொள்ளையர் கூட்டத்தினை விரட்டியடிக்கும் முயற்சியில் மாண்டு போகிறான். அதனைத் தொடந்து அந்த ஊரும், நந்திவர்மன் பூஜித்து வந்த சிவபெருமான் கோவிலும் பூமிக்குள் புதையுண்டு போனதாக நம்பப்படுகிறது.  இதை அறிந்து கொள்ளும் தொல்பொருள் ஆராய்ச்சிக் குழுவினர், செஞ்சி பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடத்தி புதையுண்ட கோவிலையும், நந்திவர்மனின் வரலாற்றை மீட்டு உலகிற்கு உரைக்க முடிவு செய்து, ஒரு குழுவாக செஞ்சி பகுதிக்கு வருகின்றனர். ஆனால் அந்த ஊரில் சிலர் இரவு நேரத்தில் அந்த கோவில் புதையுண்ட பகுதிக்கு சென்று மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். இதனால் மாலை ஆறு மணிக்கு மேல் யாரும் வெளியே வரக்கூடாது என்று அந்த ஊரில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.  இதனால் ஊர் மக்கள் அந்தக் கோவில் இருக்கும் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய...
#PV999 – பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே

#PV999 – பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே

சினிமா, திரைத் துளி
ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பு சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே' படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஜனவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. நாயகன் ராஜ் கமலின் மனைவி நடிகை லதா ராவ் பேசும்போது, "என் கணவர் நடித்ததால் என்று மட்டும் சொல்லவில்லை. உண்மையிலேயே இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் தான். படத்தின் தலைப்பைக் கேட்டபோது முதலில் நான் அதிர்ந்தேன். இது என்ன தலைப்பு என்று எனக்குக் கோபமாக வந்தது. அவர் பேசிய பிறகுதான் புரிந்தது. இந்தப் படம் பார்த்த பிறகு பெண்களுக்குச் சுற்றிலும் உள்ள மனிதர்களால், பழகும் மனிதர்களால் உள்ள ஆபத்தைப் பற்றி யோசிக்க வைக்கும். நல்லவர்கள் தானே என்று நம்பும் நாம் அவர்களைப் பற்றி சரியானவர்கள் தானா என்று சிந்திக்க வைக்கும். யாராவது படத்தைப் பார்த்த ஒரு பெண் யோசித்த...
கன்னிமாடம் விமர்சனம்

கன்னிமாடம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கன்னிப் பெண்கள், கர்ப்பினிப் பெண்கள், பெண் துறவிகள் என பெண்கள் தனியே தங்கும் இடத்திற்குப் பெயர் கன்னிமாடம் ஆகும். இந்தப் படத்தின் நாயகியான மலர்க்கோ தங்க ஓரிடம் இல்லா மல் தவிக்கிறார். படத்தின் தகிப்பிற்குக் காரணமோ, படம் தொட்டுள்ள ஆணவக்கொலை எனும் விஷயமாகும். நாயகன் அன்புவின் தங்கையை, அவனது தந்தையே சாதி ஆணவத்தில் படுகொலை செய்து விடுகிறார். தன் குடும்பமே சிதைந்துவிட்டது என வருத்தத்தில் இருக்கும் அன்பு, சென்னைக்கு ஓடி வரும் மலர் - கதிர் ஜோடியை அரவணைக்கிறான். கதிர் விபத்தில் இறந்து விட, நிராதரவாய் இருக்கும் கர்ப்பிணியான மலரைப் பாதுகாக்கும் பொறுப்பு அன்புவிற்கு ஏற்படுகிறது. இந்தச் சமூகக் கட்டமைப்பில் அது அத்தனை எளிதான காரியமா என்ன? அன்புக்கு நேரும் சோதனையும் சவால்களும் தான் படத்தின் கதை. 'இன்னுமா சாதி பார்க்கிறாங்க?' என அப்பாவித்தனமாய்க் கேட்கும் கவுன்சிலர் அழகுராணியாக ரோபோ ஷங்கரின் மனைவி பிரி...
கன்னி மாடம் – ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை

கன்னி மாடம் – ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை

சினிமா, திரைச் செய்தி
முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார் போஸ் வெங்கட். அவர் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தைப் பிடித்திருப்பவர். தற்போது புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். விழாவில் பேசிய ரோபோ சங்கர், “நான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த மேடை எனக்கு மிக நெருக்கமானது. முதல் முறையாகப் பாடகராக இங்கு மேடையேறியுள்ளேன். என்னைப் பாடகராக அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் ஹரி சாய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு அண்ணன் போஸ் வெங்கட்டுக்கு நன்றி. அவர் என் வாழ்வில் ஒவ்வொரு படியிலும் பேருதவியாக நின்றிருக்கிறார். பல வருடங்கள் முன்பாகவே இந்தக் கதையை என்னிடம் கூறியுள்ளார். ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும். தான் முதன் முதலாகப...
சூர்யா வெளியிட்ட கன்னி மாடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

சூர்யா வெளியிட்ட கன்னி மாடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

சினிமா, திரைத் துளி
நடிகர் போஸ் வெங்கட் தன் திரைவாழ்வில் அடுத்த கட்ட பயணத்தை இயக்குநராகத் துவங்கி உள்ளார். இயக்குநர் அவதாரத்தால் மிக உத்வேகத்துடனும் மகிழ்ச்சியாகவும் உள்ள போஸ் வெங்கட் தன் 'கன்னி மாடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். கன்னி மாடம் ஃபர்ஸ்ட் லுக் பற்றி, "இப்படத்தின் டிசைன்ஸ் பார்ப்பதற்குத் தனித்துவமாக, அனைவரையும் கவர்ந்துள்ளதில் மகிழ்ச்சி. “நல்ல உள்ளம் கொண்ட நடிகர் சூர்யா இதில் பங்கேற்க வில்லை என்றால், இது சாத்தியப்பட்டிருக்காது. எங்களுக்கு ஆதரவாக இருந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டதற்கு நாங்கள் சூர்யாவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்ததினால் நாங்கள் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நான் சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த மற்றும் நான் எதிர்கொண்ட ...
மெட்ராஸை வரையறுக்கும் கன்னி மாடம்

மெட்ராஸை வரையறுக்கும் கன்னி மாடம்

சினிமா, திரைத் துளி
"கன்னி மாடம்" படத்தின் மூலம் இயக்குநராகப் பரிணமிக்கிறார் நடிகர் போஸ் வெங்கட். போஸ் வெங்கட், "பிப்ரவரி 18ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி, மே 16 ஆம் தேதி முடித்தோம். இதில் மொத்த குழுவும் பங்கு பெற்ற 35 நாட்கள் மற்றும் கேமரா குழுவினர் மட்டும் பங்கு பெற்ற 7 நாட்களும் அடங்கும். தயாரிப்பாளர் ஹஷீர் அவர்களின் முழு ஆதரவு இல்லாவிட்டால், இது சாத்தியமல்ல. அவர் படைப்புச் சுதந்திரத்தில் தலையிடவே இல்லை. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படத்துக்கு ஆதரவாக இருந்தார். எங்கள் குழுவுக்கு இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைத்தது ஆசீர்வாதம். உண்மையில், கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு படக்குழுவினர் அனைவரையும் கட்டிப்பிடித்து தன் அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். இந்தக் காலத்தில், இது போன்ற உணர்ச்சிகரமான தருணங்களை ஒரு தயாரிப்பாளரிடம் பார்ப்பது எளிதல்ல" என்றார். மேலும், 'கன்னி மாடம்' படத்தி...
தேவராட்டம் விமர்சனம்

தேவராட்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போல் தேவராட்டம் என்பது நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று. ஆனால் அத்தகைய கலைக்கும் படத்துக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதாலும், படத்தில் வானுலக மனிதர்கள் இல்லாததாலும், படத்தின் தலைப்பிற்கு நேரடியாக ஒரே பொருளைத்தான் எடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது. தொழிலுக்காகக் கொலை செய்பவரையும், கொலையைத் தொழிலாகச் செய்பவரையும் பகைத்துக் கொள்கிறார் வெற்றி. அவர்கள் இவரை வெட்டப் பார்க்க, காவற்கார வம்சத்தைத் சேர்ந்த இவர் அனைவரையும் வெளுக்க, படம் முழுவதும் ஒரே வெட்டாட்டம் தான். கடைக்குட்டி சிங்கம் படம் இயக்குநரை ரொம்பப் பாதிச்சிருக்கும் போல, நாயகனுக்கு ஆறு அக்காக்கள். போஸ் வெங்கட், ஆறுபாலா, சூரி, முனீஷ் ராஜா முதலியவர்கள் அக்கா கணவர்களாக நடித்துள்ளனர். மூத்த அக்கா, மாமாவாகப் போஸ் வெங்கட்டும், வினோதினி வைத்தியநாதனும் குணச்சித்திரப் பாத்திரத்தில் அசத்தியுள்ளனர். நாயகனுடன் நெருக்க...