பாகுபலி விமர்சனம்
(பாகுபலி - தொடக்கம்)
இந்தியாவின் மிக மிகப் பிரம்மாண்டமான படம். மிரட்டியுள்ளார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.
பேரருவியின் அடிவாரத்தில் வளரும் ‘ஷிவு’-வுக்கு, மலை மீதேறிப் பார்க்க வேண்டுமென்ற தீராத ஆசை, மிகச் சிறிய வயது முதலே கனலாய் எழுகிறது. பலமுறை முயன்றும் மலையில் ஏற முடியாமல் வழுக்கி விழுந்து கொண்டேயிருக்கிறான். அருவியில் இருந்து விழும் மரத்தாலான முகமூடியின் சொந்தக்காரியை எப்படியும் காண வேண்டுமென்ற காதலின் உந்துதலில், ஒருநாள் மலையில் ஏறிவிடுகிறான். அங்கு யார் இருக்கிறார்கள்? அவர்களுக்கும் ஷிவு-வுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்விக்களுக்கான பதிலைச் சொல்கிறது பாகுபலியின் தொடக்கம்.
பாகுபலி என்றால் வலிமையான தோள்கள் உடையவன் எனப் பொருள். அந்தப் பெயருக்கு, ப்ரபாஸ் அநாயாசமாக நியாயம் செய்துள்ளார். இவர் மட்டுமல்ல, நடிகர்கள் அனைவருமே அவர்கள் ஏற்ற கதாப்பாத்திரங்களுக்கு கன கச்சிதமாகப் பொருந்துகின்றனர...