Shadow

Tag: ப்ரித்வி

சகா விமர்சனம்

சகா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சகா என்றால் தோழன். பதின் பருவத்து இளம் குற்றவாளிகளின் நட்பை மையமாகக் கொண்டு கதையமைத்துள்ளார் இயக்குநர் முருகேஷ். சத்யாவும் கதிரும் நண்பர்கள். தெருவில் திரிந்த அவர்களை வளர்க்கும் திருநங்கையைக் கொன்றவனைக் கொன்று சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைபடுகின்றனர். சிறையில் ஏற்படும் பகையும் நட்பும் அவர்களை எங்குக்கொண்டு செல்கிறது என்பது தான் படத்தின் கதை. ஷபீரின் இசையில், 'யாயும் ஞாயும் யாராகியரோ' என்ற பாடல் மிகப் பிரபலம். இந்தப் படத்திற்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சரணும், ஆய்ராவும் அந்தப் பாடலில் மிக அழகாக உள்ளனர். ஆனால் அவர்களுக்குள்ளான காதல் நம்பும்படியாக இல்லை. ரெளடிகளிடம் இருந்து தப்பிக்கும் ஆய்ரா, தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளாமல், சரண் மீது காதல் வயப்படுகிறார். அதைச் சொல்லவும் செய்யாமல் மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவ ஏற்றிருக்கும் பாத்திரத்தின் பெயர் ஆர...
தொட்ரா விமர்சனம்

தொட்ரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு சம்பவங்களை ஒன்றாக இணைத்து ஒரே படமாக எடுத்துள்ளதாக விளம்பரப் பதாகைகள் தெரிவிக்கின்றன. மேலும் ஆணவக் கொலையை மையப்படுத்திய படமும் கூட! ஆணவக்கொலை சம்பந்தமான இரண்டு சம்பவங்களையும் திரையில் பதியப்படவேண்டும் என்ற எண்ணத்திற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம். படத்தின் தொடக்கமே உடுமலைப்பேட்டையில் ஷங்கர் கொலை செய்யப்பட்டது போன்ற காட்சியமைப்புடன் தொடங்குகிறது. கதாபாத்திரத்தின் பெயரும் ஷங்கரே! ஆனால், அவரது காதலியின் பெயர் திவ்யா. அதாவது, கதாநாயகிக்குத் தர்மபுரி இளவரசனின் காதலி பெயரை வைத்துள்ளார் இயக்குநர். நாயகியின் அண்ணன் கதாபாத்திரம் பெயர் பவுன்ராஜ். தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை யுவராஜின் குறியீடாகக் கொள்ளலாம். ஷங்கர் திவ்யாவைக் காதலித்தார் என எழுதவே நெருடலாக உள்ளதால், நாயகன் ப்ரித்விராஜன் நாயகி வீணாவைக் காதலித்தார் எனக் கொள்ளலாம். ப்ரித்விராஜ் நாயகன் என்றாலும், பவுன்ராஜாக...
ப்ரித்வியின் தொட்ரா

ப்ரித்வியின் தொட்ரா

சினிமா, திரைத் துளி
தொட்ரா படத்தின் படப்பிடிப்பு பழனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் மீதமிருந்தது. அதற்கான ஐந்து நாட்கள் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வந்தது. பிருத்வி ராஜன், வீணா, எம்.எஸ்.குமார், மைனா சூசன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏ. வெங்கடேஷ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் உத்தமராஜா இசையில் சிம்பு ஒரு பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பதினைந்தாம் தேதி நிறைவு பெற்ற படப்பிடிப்பில் கிட்டத்தட்ட நூற்றைம்பது பேர் வரை கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் இரவு விருந்தாக கிடா வெட்டி உணவு வழங்க ஏற்பாடு செய்தார் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார். மகிழ்வான இவ்விருந்தோடு படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதோடு இருபத்...
வாய்மை விமர்சனம்

வாய்மை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வாய்மை – உண்மை தவறாத நிலை இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின், பெண் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதில்லை. ஆனால், அப்படியொரு சூழல் ஏற்படும் கொலை வழக்கு நீதிமன்றத்திற்கு வழங்குகிறது. நீதிபதி 12 பேர் கொண்ட ஜுரி குழுவிடம் அவ்வழக்கை ஒப்படைக்கிறார். அவர்கள் எடுக்கும் முடிவே வழக்கின் தீர்ப்பும்படத்தின் முடிவாகும். கோயில் அறங்காவலர், ஐ.பி.எஸ். அதிகாரி (திருநங்கை), பெண் விமானி, ஓய்வு பெற்ற இராணுவ கர்னல், ரோஸ் ஐ.ஏ.எஸ்., நாடக எழுத்தாளர், இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர், கோடீஸ்வரி, அயல் நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பண்டிதர், தத்துவவியலாளர் போன்ற வேறுபட்ட துறையினைச் சேர்ந்த பன்னிரெண்டு பேர் கொண்ட ஜூரி குழு அது. அவர்களுக்குள் உரையாடி, ஏக மனதாக எடுக்கும் முடிவே உறுதியானது. ஒருவர் முரண்பட்டாலும் அந்தத் தீர்ப்பு செல்லாது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு அறைக்குள்ளேயே நிகழ்கிறது. ஆனால், ...