Shadow

Tag: ப்ரியா ஆனந்த்

அந்தகன் விமர்சனம்

அந்தகன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அந்தகன் என்றால் பார்வையற்றவன் என்ற பொருள். 'அந்தாதுன்' எனும் ஹிந்திப்படத்தின் உரிமையை வாங்கி மறு உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் தியாகராஜன். பார்வையற்றவரான க்ரிஷ், பியானோ இசைக்கலைஞராக ஜூலியின் ரெஸ்டோபாரில் பணியில் சேருகிறார். அவரைத் தனது கல்யாண நாளன்று, தன் வீட்டில் வந்து வாசிக்கும்படி நடிகர் கார்த்திக் கேட்டுக் கொள்கிறார். க்ரிஷ், நடிகர் கார்த்திக்கின் வீட்டிற்குச் செல்ல, அங்கே கார்த்திக்கின்மனைவி சிமியால் கார்த்திக் கொல்லப்பட்டு இறந்துகிடக்கிறார். பார்வையற்றவர் என்ற போதும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததால் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார் கிரிஷ். எப்படி அப்பிரச்சனையில் இருந்து மீள்கிறார் என்பதே படத்தின் கதை. ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகராகவும், ஆட்டோ ஓட்டுநராகவும் முரளி எனும் பாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். சிம்ரனை, 'ஆம்பளப் பொறுக்கி' எனத் திட்டுகிறார். சின்ன பாத்திரம்த...
LKG விமர்சனம்

LKG விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
LKG என்பது லால்குடி கருப்பையா காந்தியின் சுருக்கம். கவுன்சிலரான எல்கேஜிக்கு எம்.எல்.ஏ.வாக வேண்டுமெனக் கனவு. கனவு என்னானது என்பதுதான் படத்தின் கதை. ஆர்ஜே பாலாஜியின் அப்பாவாக நாஞ்சில் ச்மபத் நடித்துள்ளார். இன்னோவா சம்பத் என சகட்டுமேனிக்கு அவர் கிண்டல் செய்யப்பட்டாலும், மகனின் படிப்புக்குப் பணம் கட்ட இயலாத வாழ்க்கைதான் அவருடையது. மேடையேறி அலங்காரச் சொற்பந்தல் போட்டு அமைந்திடாத பொருளாதாரம், இனி சினிமாவில் அவருக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. காமிக்கலான அவர் முகம் நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு ஏற்றது. தேர்ந்த இயக்குநரின் கைப்பட்டால் சிறந்த குணசித்திர நடிகராகவும் மிளிர வாய்ப்புள்ளது. அதனால்தான் வில்லன் கதாபாத்திரத்திற்கு அவரை அணுகிய ஆர்ஜே பாலாஜி, தோற்ற அரசியல்வாதி பாத்திரத்தில் அவரது அப்பாவாக நாஞ்சில் சம்பத்தை நடிக்கவைத்துவிட்டார். போஜப்பனாக நடித்திருக்கும் ராம்குமாருக்கு இது மூன்றாவது படம். அரசி...
காயங்குளம் கொச்சுண்ணி விமர்சனம்

காயங்குளம் கொச்சுண்ணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கேரளத்து நாடோடிப் பாடல்களின் முடிசூடா மன்னனாக விளங்குபவர் 19 ஆம் நூற்றாண்டு காயங்குளம் கொச்சுண்ணி. கள்வரென்றாலும், சுரண்டல்காரர்களான பணக்காரர்களிடம் இருந்து திருடி ஏழைகளுக்குக் கொடுக்கும் நல்லவர். காலங்கள் கடந்தும், செவி வழியாக மக்களின் மனங்களில் நுழைந்து, இன்றளவும் தன் நாயக பிம்பத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சகாப்தம் அவர். தன் தந்தையைப் போல் திருடனாகி விடக்கூடாதென ஒரு மளிகைக் கடையில் பணி புரிகிறார் கொச்சுண்ணி. மனதில் பேராசையும் வஞ்சகமும் நிறைந்த பிராமணர்கள், ஒரு பொய் குற்றச்சாட்டினைக் கொச்சுண்ணி மீது சுமத்தி, நையப்புடைத்து, மரத்தில் தலைகீழாகத் தொங்க விடுகின்றனர். பிரிட்டிஷ் அரசாங்கம் நடுங்கும் கொள்ளைக்காரரான 'இத்திக்கர பக்கி', கொச்சுண்ணியை மீட்டு, பார் போற்றும் கொள்ளைக்காரர் காயங்குளம் கொச்சுண்ணியாக உருவாக்குகிறார். அதன் பின், அவர் சந்திக்கும் தொடர் துரோகங்களைக் கடந்து, காயங்கு...