Shadow

Tag: ப்ரியா பவானி சங்கர்

ரத்னம் விமர்சனம்

ரத்னம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சில பல காரணங்களினால் ப்ரியா பவானி சங்கரை கொல்லத் துரத்தும் ஒரு கூட்டம். ஒரே ஒரு காரணத்திற்காக ப்ரியா பவானி சங்கரைக் காக்க உயிரையும் கொடுப்பேன் என்று எதிர்த்து நிற்கும் விஷால், இந்த இரண்டிற்கும் பின்னால் இருக்கும் பின்கதை, இவை தவிர்த்து கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளிலும் தெறிக்கும் இரத்தம், இவையெல்லாம் சேர்ந்தது தான் ரத்னம்.வேலூர் பகுதி ஆளும்கட்சி எம்.எல்.ஏ “பன்னீர்” ஆக வரும் சமுத்திரக்கனிக்கு அநீதிக்கு எதிரான அண்டர் கிரவுண்ட் வேலைகள் அனைத்தும் செய்பவராக விஷால் இருக்கிறார். சமுத்திரக்கனியும் ரத்னமாகிய விஷாலை ரத்னம் போல் பொத்திப் பாதுகாக்கிறார். அவர்களுக்குள் அப்படி என்ன பாசப் பிணைப்பு என்பதற்கு ஒரு பின்கதை. திருத்தணியில் இருந்து வேலூருக்கு நீட் தேர்வு எழுத வரும் ப்ரியா பவானி சங்கரைப் பார்த்ததும் வழக்கமான ஹீரோக்கள் உருகுவது போல் விஷாலும் உருகுகிறார். அவர் ஏன் அப்படி உருகுகிறார் என்பதற்குப...
குறைந்த செலவில் நிறைந்த தரத்தைத் திரையுலகிற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸின்  நோக்கம் – இயக்குநர் ஹரி

குறைந்த செலவில் நிறைந்த தரத்தைத் திரையுலகிற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸின் நோக்கம் – இயக்குநர் ஹரி

சினிமா, திரைத் துளி
கமர்ஷியல் சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து தனது வெற்றி படங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் இயக்குநர் ஹரி, டப்பிங், படக்கோர்ப்பு (மிக்ஸிங்), மற்றும் படத்தொகுப்பு (எடிட்டிங்) உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை திரையுலகினர் சிறப்பாக மேற்கொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட குட்லக் ஸ்டுடியோஸை கடந்த வருடம் தொடங்கினார். கடந்த ஒரு வருடமாக மேற்கண்ட சேவைகளை திறம்பட வழங்கி வந்த குட்லக் ஸ்டுடியோஸ், இன்று இரண்டாம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக, 5.1 மிக்ஸிங் மற்றும் டப்பிங் வசதி கொண்ட புதிய ஸ்டுடியோவை இயக்குநர் ஹரி தொடங்கினார். அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை குறைந்த செலவில் நிறைந்த தரத்தில் திரையுலகத்திற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்று கூறிய இயக்குநர் ஹரி, தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்...
”நான் விழுந்து கொண்டிருக்கும் போதே, என்னை தூக்க கை கொடுத்தார் அருள்நிதி” – டிமாண்டி காலனி 2 டிரைலர் வெளியீட்டில் அஜய்ஞானமுத்து பேச்சு

”நான் விழுந்து கொண்டிருக்கும் போதே, என்னை தூக்க கை கொடுத்தார் அருள்நிதி” – டிமாண்டி காலனி 2 டிரைலர் வெளியீட்டில் அஜய்ஞானமுத்து பேச்சு

சினிமா, திரைச் செய்தி
பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் வழங்க ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிரட்டலான ஹாரர் படமாக, மெகா ப்ளாக்பஸ்டர் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் 'டிமான்டி காலனி 2' .விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இவ்விழாவினில்..தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசியதாவது...பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் முதல் முறையாகத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளோம். நாங்கள் பிஸினஸ் க்ளோபல் சாஃப்ட் வேர் கம்பனி ஏன் படத்தயாரிப்பு என்ற கேள்வி இருந்தது. மக்களிடம் சென்று சேர வேண்டும் ஹாலிவுட்டில் இருப்பது போல் மிகப்பெரிய ஸ்டூடியோவாக இர...
‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்  வெளியானது

‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது

சினிமா, திரைச் செய்தி
தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களின் வரலாற்றை மாற்றி,  அனைவரையும் இருக்கை நுனியில் கட்டிப்போட்டு பயமுறுத்திய திரைப்படம் “டிமான்ட்டி காலனி”.  2015 ல் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம்  பாகம், 8 வருடங்களுக்குப்  பிறகு 'டிமான்ட்டி காலனி 2'  என்ற பெயரில், மிகப்பிரமாண்ட பொருட்செலவில், மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில்,  சிறப்பான VFX காட்சிகளுடன் உருவாகி வருகிறது.  இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க, நடிகர் அருள்நிதி  நாயகனாக நடித்துள்ளார்.மேலும் நடிகை பிரியா பவானி சங்கர்  முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. ...
பொம்மை விமர்சனம்

பொம்மை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
Mannequin (1987) என்ற ஆங்கிலப்படத்தின் அதிகாரபூர்வமற்ற தழுவலே ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான பொம்மை. ஒரு நிறுவனத்தில் பொம்மை செய்யும் கலைஞராக வேலை செய்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அவர் வடித்தெடுக்கும் பொம்மையில் தன் காதலி பிரியா பவானி சங்கரைப் பார்க்கிறார். அந்தப் பொம்மை உயிர் பெற்று வந்து எஸ்.ஜே. சூர்யாவிடம் பேசுகிறது. தன்னை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்கிறது. ஒரு கட்டத்தில் அந்தப் பொம்மைக்காகக் கொலையும் செய்கிறார். அந்தக் கொலைக்கான விசாரணை ஒருபுறம் நடக்க, பொம்மையைத் தன்னோடு வைத்துக் கொள்ள எஸ்.ஜே. சூர்யா போராட, எப்படியான முடிவு அமைந்தது என்பதே படத்தின் கதை. எஸ்.ஜே. சூர்யா நல்ல நடிகர் என்பதைப் பல படங்களில் நிறுவியிருக்கிறார். அதே போல் கொஞ்சம் ஓவராக நடிப்பார் என்பதையும் சில படங்களில் நிறுவியிருக்கிறார். அந்தச் சில படங்களில் ஒன்றாக இந்தப் படமும் அமைந்தது ரசிகனின் துரதி...
யானை – இயக்குநர் ஹரியின் வேற மாதிரி படம்

யானை – இயக்குநர் ஹரியின் வேற மாதிரி படம்

சினிமா, திரைச் செய்தி
அருண் விஜயும், இயக்குநர் ஹரியும் இணையும் யானை திரைப்படம், ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளது. ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாகத் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஹரி, “நானும், அருண் விஜயும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்தக் கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் அவர்கள்தான். இந்தப் படம் பெரிய படம், பட்ஜெட் வகையில் இது அதிகம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை. கடந்த 3 வருடங்கள் எனக்கு நிறைய கற்று கொடுத்தது. படத்தைக் கொஞ்சம் வேற மாதிரி எ...
பிரியா பவானி சங்கர், அசோக் செல்வன் நடிக்கும் ‘ஹாஸ்டல்’

பிரியா பவானி சங்கர், அசோக் செல்வன் நடிக்கும் ‘ஹாஸ்டல்’

சினிமா, திரைத் துளி
பல வெற்றி படங்களைத் தயாரித்தவரும், விநியோகம் செய்தவருமான R.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாகத் தயாரித்துள்ள புதிய படத்திற்கு “ஹாஸ்டல்” எனப் பெயரிட்டுள்ளனர். சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி (KPY Vijay TV), உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் “ஹாஸ்டல்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக படக்குழு இறங்கியுள்ளது. தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்: >> தயாரிப்பு - R.ரவீந்திரன் (ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்) >> இணை தயாரிப்பு - கல் ராமன் >> இயக்கம் - சுமந்த் ராதாகிருஷ்ணன் >> ஒளிப்பதிவு - பிரவீன் குமார் >> இசை - போபோ சசி >> படத்தொகுப்பு - ராகுல் &...
மாஃபியா: அத்தியாயம் 1 விமர்சனம்

மாஃபியா: அத்தியாயம் 1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாஃபியா – குற்றத்தை நிறுவனமயப்படுத்தும் ஓர் இயக்கம் எனப் பொருள் கொள்ளலாம். அப்படி, போதைப் பொருள் கடத்துவதை நிறுவனமயப்படுத்தும் திவாகர் குமரனைப் பிடிக்க நினைக்கிறார் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஆரியன். இதுதான் மாஃபியா படத்தின் கதை. Ground to Earth பெர்ஸ்னாலிட்டியாக நடித்துள்ளார் பிரசன்னா. டிகே (DK) எனும் திவாகர் குமரன், பெரிய சிண்டிகேட்டின் லோக்கல் தலைவராக இருந்தும், யாரையாவது மிரட்ட, தானே நேரடியாகக் களம் இறங்குகிறார். அவரது அலட்டலில்லாத அமைதி ரசிக்க வைக்கிறது. காட்டில் தானொரு நரி எனச் சொல்லிக் கொள்ளும் அவர், அது போன்று குயுக்தியாக எதுவும் செய்வதில்லை. நாயகனைக் காதலிக்கவும், ஸ்லோ-மோஷனில் நடக்கவும், ஆரியனின் குழு உறுப்பினர் சத்யாவாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இன்னொரு குழு உறுப்பினர் வருணாக பாலா ஹாசன் நடித்துள்ளார். வில்லனின் குடோனைத் தாக்கும் மிக முக்கிய பணியை இருவரும...
மான்ஸ்டர் விமர்சனம்

மான்ஸ்டர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஞ்சனம் அழகியபிள்ளை ஒரு சொந்த வீடு வாங்குகிறார். அவரது வீட்டைச் சுற்றிச் சுற்றி ஒரு எலியும், ஒரு மான்ஸ்டரும் சுற்றிச் சுற்றி வருகின்றனர். எலியும், மான்ஸ்டரும் ஏன் எதற்கு அவர் வீட்டைச் சுற்றி வருகின்றனர் என்பதும், அதிலிருந்து அஞ்சனம் அழகியபிள்ளை எப்படித் தப்பிக்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. ஒருவழியாக, எந்தவித அச்சமும் இல்லாமல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போகுமளவு ஒரு நல்ல குழந்தைகள் படம், ஆச்சரியமாகத் தமிழில் நேரடியாக வெளியாகியுள்ளது. சுட்டீஸ், குட்டீஸ்களுக்கு ஏற்றதொரு படமாக மட்டும் அல்லாமல், பெரியவர்களும் ரசித்து மகிழும்படியான படமாகவும் உள்ளது. அஞ்சனம் அழகியபிள்ளை, பெண் பார்ப்பதற்காக மேகலா வீட்டிற்குச் செல்கிறார். மேகலாவாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். கதைக்கு உதவாத கதாபாத்திரம் எனினும் நிறைவாகத் தோன்றியுள்ளார் படத்தில். எஸ்.ஜே.சூர்யாவும், எலியும் தான் பிரதான பாத்திரங்கள் என்ற...
மேயாத மான் விமர்சனம்

மேயாத மான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மேயாத மான் என்ற தலைப்பு மிகவும் ஆச்சரியமூட்டுகிறது. ஏன் பரவசமூட்டுகிறது என்று கூடச் சொல்லலாம். தலைப்பு விஷயத்திலேயே நாயகன் ஓர் அடிப்படை நேர்மையைக் கடைபிடித்துள்ளார் என்றே தோன்றுகிறது. 'ஸ்ரீவள்ளி (1945)' படத்தில் வரும் பாடல் வரியில் இருந்து தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. முருகன் வள்ளியைக் கரெக்ட் செய்யப் பாடும் பாடலில், வள்ளியினது கற்பைப் போற்றும் வகையில் வரும் பதம்தான் 'மேயாத மான்'. அதாவது படி தாண்டா விர்ஜின் கேர்ள் என்பதன் கவித்துவ பதம் தான் மேயாத மான். ஆனால் இதையே இயக்குநர் ரத்ன குமார், நாயகன் தான் மேயாத மான் என மிகச் சாதுரியமாக நிறுவுகிறார். ஒரே வகுப்பில் படித்தும், மூன்று வருடமாக நாயகியிடம் காதலைச் சொல்லாத நாயகன் (இதயம் முரளி) தான் மேயாத மேனாம். கண் முன் புல்லுக்கட்டு இருந்தும் அதை மேயாதவன், அதாவது காதலைச் சொல்லாததால் நாயகன் மேயாத மேனாம். அடடே.! ஆனால், நாயகனுக்கு ஏன் நாயகியைப் பிடிக்...