Broken Script விமர்சனம்
ஜோ ஜியோவானி சன்ஜித் சிங் தமிழ் பேசத் தெரியாத ஒரு வெளிநாட்டு நபர். இவர் ஒரு திரைப்படம் அதுவும் தமிழில் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். தானே தயாரிக்கவும் தயாராக இருக்கிறார். இவரை நெருங்கும் ஒருவர் நான் தமிழில் உங்களுக்கு ஒரு படம் இயக்கிக் கொடுக்கிறேன் என்று சொல்ல, படப்பிடிப்பும் துவங்குகிறது. படம் பாதிக்கு மேல் முடிவடைந்த பின்னர் தான் ஜியோவானி சன்ஜித் சிங் ஒரு விசயத்தை உணர்கிறார். அவர்கள் எடுத்துக் கொண்டு இருப்பது ஒரு ஹாலிவுட் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக் என்று. உடனே அந்த இயக்குநரை அடித்து விரட்டிவிட்டு, படத்தை அப்படியே கிடப்பில் போடுகிறார். சில வருடங்கள் செல்கின்றது. அந்தப் படத்தை அப்படியே போட மனமில்லாமல் எடுத்த படத்துணுக்குகள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அவரே புதிதாக கதை எழுதி இயக்கத் துவங்குகிறார். இத்தனைக்கும் அவருக்கு ஐந்து தமிழ் வார்த்தைகள் கூட முழுதாகத் தெரியாது. ஆன...