Shadow

Tag: மகளிர் தினம் 2024

ஒரு ஆண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லித்தர வேண்டும் – நடிகர் ஆரி அர்ஜுனன்

ஒரு ஆண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லித்தர வேண்டும் – நடிகர் ஆரி அர்ஜுனன்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் ஆரி அர்ஜுனன், ‘பெண்கள் ஒவ்வொருவருமே கொண்டாடப் பட வேண்டியவர்கள் தான்’ என்பதை வழியுறுத்தி தனது அம்மாவின் நினைவைப் போற்றும் வகையில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமாக, எளிய வர்க்கத்தின் பின்னணியிலிருந்து பணியாற்றும் பெண்கள் 10 பேரைச் சந்தித்து வாழ்த்துக் கூறியதுடன், அவர்களுக்கு ஆச்சரிய பரிசாகத் தங்க நாணயம் பரிசளித்தார். இயற்கை சார்ந்த விவசாயம், இயற்கை உணவுகள், சமூகத்திற்கான உதவிகள் எனத் தொடர்ந்து, சமூக அக்கறையுடன் பணியாற்றி வரும் நடிகர் ஆரி அர்ஜுனன், தன் அன்னையின் நினைவாக மகளிரைக் கொண்டாடும் வகையில் அவர்களுக்குப் பரிசளித்துள்ளார். ஆரி அர்ஜுனன், “ஒவ்வொரு மகளிரும் ஒவ்வொரு நாளுமே கொண்டாடப்பட வேண்டியவர்கள். குறிப்பாக நம் இரத்த உறவுகளான அம்மா, மனைவி, அக்கா, தங்கை, குழந்தை, என அனைவரையும் தாண்டி, நமக்காகவும் இந்தச் சமூகத்திற்காகவும் உழைக்கக் கூடிய, கோடான கோடி மகளிர்கள் இங்கு இருக்கிறார்க...