Shadow

Tag: மகாபாரதம்

கர்ணன் | பரசுராமரின் சாபம் பலித்ததா?

கர்ணன் | பரசுராமரின் சாபம் பலித்ததா?

ஆன்‌மிகம்
கர்ணன் | குலம் காட்டி கல்வி மறுக்கப்பட்டதா? பரசுராமர், கர்ணனை ஷத்திரியன் என்று அறிந்து சாபம் அளித்தார். அதனால் அவன் வலிமை குன்றியது, கடைசி நேரத்தில் ஆயுதங்கள் துணை வராமல் போனது என்ற குற்றச்சாட்டு. முதலில் அவன் ஏன் பரசுராமரிடம் பயிலச் சென்றான் ? அவன் துரோணரிடம் பயிலும் போது ஒரு வேண்டுகோள் வைக்கிறான். // http://www.tamilhindu.com/2008/12/mahabharata-discussions-007/ பயிற்சிபெற்ற காலத்தில், அர்ஜுனன் தன்னைப் பார்க்கிலும் அதிகம் தேர்ச்சி பெற்றவனாகவும், பல திவ்ய அஸ்திரங்களை எய்யவும் திரும்பப் பெறுவதற்குமான பயிற்சிகளில் தேறியவனாகவும் இருந்தது கர்ணனால் பொறுத்துக்கொள்ள முடியாததாக இருந்தது. ஆகவே, துரோணரைத் தனிமையில் அணுகினான். அவரிடம் கர்ணன் கேட்டுக் கொண்டதை நாரதர் விவரிக்கிறார்: Beholding that Dhananjaya was superior to every one in the science of weapons, Karna. one day approached Drona in pr...
கர்ணன் கொடையாளியா ?

கர்ணன் கொடையாளியா ?

ஆன்‌மிகம்
(Image Courtesy: Quora.com) கர்ணனின் வீரம் மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம் வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம் பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம் பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம் கர்ணன் படத்தில் வரும் பாடல். இப்படி கர்ணனின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து வரும் நிறைய கதைகள் உண்டு. புறக்கதைகளை விடுத்துவிட்டு, பாரதத்தில் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கும் முன்பு கொடை, வள்ளல் தன்மை என்றால் என்ன? அதை முதலில் வரையறுத்துவிடலாம். கொடை என்றால் தியாகம் என்று அகராதி சொல்கின்றது. எந்த ஒரு கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ இல்லாமல், மனம் உவந்து பிறருக்கு தானமாகத் தருவது. அப்படித் தொடர்ந்து தன்னிடம் இருப்பதைப் பிறர் நலனுக்காக, பிறர் வாடுவதைக் கண்டு தன் மனம் வாடி வறியோர்க்கு வாரி வழங்குவதே வள்ளல் தன்மை. சீதக்காதி வள்ளல் பற்றிய கதை தெரியும் இல்லையா? படிக்காசு புலவர் தன் வறுமைக்காக அவரிடம் ...
கர்ணனின் வீரம்

கர்ணனின் வீரம்

ஆன்‌மிகம்
(Image Courtesy: Quora.com) முந்தைய பகுதி: கர்ணன் துரியோதனன் நட்பு மாவீரன் என்றால் ஏதோ சில தருணங்களில் மட்டும் நல்ல வித்தைகளைக் காட்டிவிட்டு, அல்லது வீரத்தைக் காட்டிவிடுவது அன்று. உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம். பெரும்பாலோர் கூறுவது கர்ணன் துரோணரிடம் பாடம் பயிலச் சென்ற போது அவனை குலம் காட்டி துரோணர் மறுத்தார் என்பது. எவ்வளவு அப்பட்டமான பொய்? கர்ணன் துரோணாச்சாரியாரின் மாணவர்களில் ஒருவன். துரோணர் வேண்டிய குருதட்சணை, துருபதனைச் சிறையெடுத்தலாகும். கவனிக்க, கர்ணன் இங்கே துரோணரின் மாணவனாக, கௌரவர்களின் பெரும்படையுடன் சென்று போரிட்டுப் புறமுதுகிட்டு வருகிறான். ஆனால் பாண்டவர்கள் ஐவராகச் சென்று துருபதனைச் சிறையெடுத்து வருகிறார்கள். ஆக, கர்ணன் வீரன் என்பது இங்கே அடிபட்டுவிட்டது. கூடவே துரோணர் வில் வித்தையை கர்ணனுக்கு சொல்லித் தர மறுத்தார் என்னும் பொய்யும் வெட்டவெளிச்சமாகிவிட்டது. // Vaisamp...
“அடிமைக்கு ஏன் மேலாடை?” – கர்ணன்

“அடிமைக்கு ஏன் மேலாடை?” – கர்ணன்

ஆன்‌மிகம்
(Image Courtesy: https://detechter.com/) கர்ணனைப் பற்றி நாம் உருவாக்கிக் கொண்டுள்ள பிம்பத்திற்கு, சிவாஜி கணேசன் நடிப்பில் 1964 இல் வெளிவந்த “கர்ணன்” திரைப்படமே முக்கிய காரணம். அந்தப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டது போல்தான் இதிகாசங்களும், காவியங்களும் கர்ணனை அடையாளப்படுத்துகின்றதா எனப் பார்ப்போம். பெற்றவர் பிள்ளையை வீதியில் விட்டெறிந்தால் குற்றம் உடையோர் குழந்தைகளா? பெற்ற மக்கள் சுற்றமும் அற்றுச் சுயமதிப்பும் விட்டனரே! அர்ப்பணம் செய்தோம் அவர்க்கு. என்ற வெண்பாவுடன் ஆரம்பிக்கும் படம். கர்ணன் தேர்த்தட்டில் சாய்ந்திருக்க, கிருஷ்ணன் அந்தணனாய் வந்து கையேந்தி நிற்கும் போது, இந்தக் குரலில், ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலைக் கேட்டு கண்ணில் நீர் வழியாதோர் குறைவாகவே இருக்க முடியும். படம் முழுக்க வசனங்கள் அப்படி விளையாடும். “வளர்த்த தந்தையே, வளர்த்த தாய் சொன்னதைக் கேட்டுக் கொண்டு தான் வந்தேன்...
சக்கர வியூகம் – ஐயப்பன் கிருஷ்ணன்

சக்கர வியூகம் – ஐயப்பன் கிருஷ்ணன்

புத்தகம்
நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமுடைய தோழியொருவர், தான் மகாபாரதமோ இராமாயணமோ படித்ததே இல்லை எனச் சொன்னார். ஆனால் அவர் மகாபாரதத்தின் கிளைக் கதைகள் மட்டுமன்றி, கூடுதலாகவே மகாபாரதத்தைப் பற்றி பதிப்பில் வந்திராத சில வட்டாரக் கதைகளையும் தெரிந்து வைத்திருக்கிறார். காரணம், ஜீஜா பாய்களைக் கொண்ட தேசமிது! வேலூரைச் சேர்ந்த ஐயப்பனின் தந்தை ஒரு பாரதக் கூத்துக் கலைஞர். தெருகூத்து பாரதக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர். கதைகளுக்கு காது கொடுப்பது போன்ற மகிழ்வான விஷயம் வேறெதுவும் இருக்க இயலாது. அதுவும் மகாபாரதக் கதைகளைக் கேட்பதோ, படிப்பதோ எப்பொழுதும் பரவசமான ஒன்று. அதனால் தான் வியாசர் பறந்த வானில் பறக்க தைரியமாக முயல்கிறார் ஜெயமோகன். தெரிந்த கதைகள் தானெனினும், சொல்பவரின் கற்பனைக்கேற்ப புதிய நிறங்களைப் பெற்ற வண்ணமிருப்பதே பாரதத்தின் சிறப்பு. அத்தகைய சிறப்பு, ஐயப்பனின் சிறுகதைத் தொகுப்பான சக்கர வியூகத்திற்கும் ...