மகாமுனி விமர்சனம்
மகாமுனி என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர் கெளதம புத்தர். இந்தியப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் தேடினால் சில பெயர்கள் கிடைக்கலாம். ஆனால், மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவைப் பொறுத்தவரை, மகாமுனி என்றால் புத்தர்தான். சத்திரியனாக இருந்து துறவு மேற்கொண்டு முனியானவர் என்பதைப் படத்தோடு பொருத்திக் கொள்ளலாம்.
சகோதரர்களான முனிராஜும் மகாதேவனும் சிறு வயதிலேயே பிரிந்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரின் வாழ்வும் ஒரு புள்ளியில் இணைந்து மகாமுனியாய் பரிமாணம் பெறுவதுதான் படத்தின் கதை.
இயக்குநர் சாந்தகுமார், படம் தொடங்கியதுமே ஒரு கனமான போர்வையைப் பார்வையாளர்கள் மீது படர விடுகிறார். இறுதி வரை அதை விலக்க முடியாமல், பார்வையாளர்கள் அதன் கனத்தைச் சுமந்தவண்ணமுள்ளனர். அடுத்து என்ன என்ற பதைபதைப்போ, சுவாரசியமோ இல்லை. திரையில் காணும் பிரதான கதாபாத்திரங்களோடு பார்வையாளர்களால் தங்களைப் பொருத்திப் பார்த்துக் ...