
விடாமுயற்சி விமர்சனம்
ஒரு நோக்கத்தை, குறிக்கோளை அடையும் பொருட்டு ஒருவர் மேற்கொள்ளும் செயலை முயற்சி (try/ effort) எனலாம். அத்தகைய முயற்சியில் வெற்றி பெறாவிட்டால், துவண்டு அப்படியே அம்முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பதை விடாமுயற்சி எனலாம். ஒரு போட்டியில் கோப்பையை வெல்ல மேற்கொள்ளும் செயல்களை முயற்சி என்றழைக்கலாம். அப்போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும், மனம் துவளாமல் அடுத்த முறையிலோ, அடுத்தடுத்த முறையிலோ வென்று காட்டுவதற்கு விடாமுயற்சி தேவைப்படுகிறது.
ஒரு கார் பயணத்தில் மனைவி கயலைத் தொலைத்து விடுகிறார் அர்ஜுன். அஜித் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் அர்ஜுன். கயலை எப்படிப் போராடி அர்ஜுன் மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
மனைவியோ, குடும்ப உறுப்பினரோ, தொலைந்துபோகும் பொழுது, வெறுமென முயற்சி செய்யாமல் போராடி மீட்பதுதான் நாயகனுக்கு அழகு. அஜித்தும் அதைத்தான் செய்கிறார். ஆனால், தனது ரசிகர்க...