வாய்தா விமர்சனம்
மொபைலில் பேசிக் கொண்டே பைக் ஓட்டிக் கொண்டு வரும் ஒவரைத் தவிர்க்க, எதிரே பைக் ஓட்டி வரும் இளைஞன், சாலையில் அமர்ந்திருக்கும் முதியவர் அப்புசாமி மீது ஒரு அவ்விளைஞன் பைக்கால் மோதி விடுகிறான். அவரது வலது கையில் தீக்காயத்துடன் எலும்பு முறிவு ஏற்படுகிறது. நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு செல்கிறது. பாதிக்கப்பட்ட அப்பாசாமி, தனக்கு காப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்க, நீதிமன்றமோ ஒரு வினோதமான தீர்ப்பை அளிக்கிறது.
சாதிய ஏற்றதாழ்வு, சாதியப் பெருமிதம், ஓர் ஜாதிக்குள் நடக்கும் போட்டி பொறாமை சண்டைகள், அதை மறந்து அவர்கள் இணையும் புள்ளிகள் என படம் பேசும் அரசியல் நுண்ணியமாய் உள்ளது. நீதி இயங்கும் லட்சணம் அடிவயிற்றில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது.
முதியவர் அப்புசாமியாக மு.ராமசாமி நடித்துள்ளார். கதையோடு இயல்பாய்ப் பொருந்தும் பாத்திரமாக வருகிறார். ஊரில் ஆதிக்க சாதியினருக்குப் பயந்து அடிபணிவதாகட்டும், தனக...