Shadow

Tag: மசாலா படம்

மசாலா படம் விமர்சனம்

மசாலா படம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விமர்சனம் என்ற பெயரில், தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் முடியும் முன்பாகவே, கிழிக்கிழி எனக் கிழிக்கும் பதிவர்களையும் (Bloggers), ஃபேஸ்புக் பயனர்களையும், ட்வீட் போடுபவர்களையும் பகடி செய்வது போல் தொடங்குகிறது படம். இணைய விமர்சகர்களைக் கலாய்த்து ஒரு படமா? அடடே.. ‘செத்தான்டா சேகர்’ என விமர்சகர்களுக்காக உச்சுக் கொட்டும்போது ட்விஸ்ட் வைத்து விடுகின்றனர். அங்கே ‘கட்’ செய்தால் இடைவேளை. படம் தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே இடைவேளை வந்துவிட்டதே என ஆச்சரியப்பட வைக்கிறது. படத்தின் மொத்த நீளமே 110 நிமிடங்கள்தான். ஆறு மாதத்துக்குள் ஒரு கதை சொல்லவேண்டும் என விமர்சகர்களுக்கு தயாரிப்பாளர் ஒரு சவால் விடுக்கிறார். அந்தக் கதையை, பெரிய ஹீரோ பெரிய இயக்குநர் வைத்து தயாரிப்பதாகவும் ஒத்துக் கொள்கிறார். இரண்டாம் பாதியில், விமர்சகர்களின் கதைத் தேடலில் படம் தொடங்குகிறது. கதையில் எதார்த்தம் வேண்டும...
மீண்டும் லஹரி மியுசிக்

மீண்டும் லஹரி மியுசிக்

சினிமா, திரைத் துளி
பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா நடிப்பில் 'ஆல் இன் பிக்சர்ஸ்' விஜய ராகவேந்திரா தயாரிக்கும் 'மசாலா படம்' வேகமாகத் தயாராகி வருகிறது. புகழ்பெற்ற ஆடியோ நிறுவனமான லஹரி மியுசிக் மசாலா படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் லக்ஷ்மன் இயக்கும் இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார். “ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘மசாலா படம்’ ஆடியோ உரிமையைப் பெற்றதில் எங்கள் நிறுவனம் பெருமகிழ்ச்சியடைகிறது. இளம் இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யாவின் இசை நன்றாக வந்துள்ளது. படத்தின் ட்ரைலர், டீசர் ஆகியவை பார்த்தேன். இந்த இளம் கூட்டணியின் தயாரிப்பு மிகவும் திருப்தி அளிக்கிறது. லஹரி மியுசிக் தமிழ், தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளில் லஹரி மியுசிக் ஆடியோ உரிமைகளைப் பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘மசாலா படம்’ மூலம் தமிழ் இசையுலகில் மீண்டும் வருவது பெரும் மகிழ்ச்சி அளிக...