Shadow

Tag: மணவாளன்

ஏனோ தெய்வம் சதி செய்தது!?

ஏனோ தெய்வம் சதி செய்தது!?

கட்டுரை, சினிமா
இங்கு எவரும் அவரவர் விருப்பப்படி பிறப்பதில்லை. அவரவர் தேர்விற்கு முகம் கிடைப்பதாக இருந்தால், பிறக்கும் முன்பே அடிதடியும் குழப்பமும் ஏற்பட்டு கண்டிப்பாக சிருஷ்டியே ஸ்தம்பித்திருக்கும். ஆனால் சினிமாவில் தான் விருப்பப்பட்ட முகத்தை காட்டமுடியும் என தனது பிரத்தியேக ஒளிச் சேர்க்கையினால் மாயங்கள் நிகழ்த்தியவர் பாலு மகேந்திரா. அப்படி ஒரு நாய்க்குட்டிக்கு அவர் ‘சுப்பிரமணி’ எனப் பெயரிட்டு, தமிழர்கள் மனதில் அதை படரவிட்டு இன்றோடு 32 வருடங்கள் ஆகிறது. ஆம், ‘மூன்றாம் பிறை’ வெளியிடப்பட்ட தினம் இன்று. இன்னமும் எவரும் சுப்பிரமணியை மறந்திருக்க வாய்ப்பில்லை.கமல், பாலு மகேந்திரா ஆகிய இருவருக்குமே தேசிய விருதினைப் பெற்றுத் தந்த படம். அப்பொழுது கொண்டாடப்பட்ட படங்கள் பலவும் இன்று பார்க்க நகைப்புக்குரியதாய்த் தோன்றுகிறது. ரசனைகளின் மாற்றத்தால் நிகழும் புரிதல்கள் இவை. ஆனால் அன்று போல இன்றும் ரசனை மாற்றங்களையும...
ஃபேஸ்புக் திருடர்கள் – உஷார்!!

ஃபேஸ்புக் திருடர்கள் – உஷார்!!

தொழில்நுட்பம்
விலங்குகள்தன் உணவுக்காகவும், இயற்கை இடர்பாடுகள் மற்றும் எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள வாழ்நாள் முழுவதும் போராடும் குணம் கொண்டவை. விலங்குகளின் வழித்தோன்றலான மனிதனும் ஆரம்ப காலத்தில் இத்தகையதொரு போரட்டத்தில் பங்கு கொண்டவனே. கூட்டு உழைப்பே உயிர்வாழ அடிப்படை என புரிந்து கொண்டவன் நாகரீக சமுதாயத்தை கட்டமைத்தான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த சார்ந்து வாழும் உளவியல் தான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களை வெற்றிகரமாக இயங்கச் செய்கிறது. Personality and Individual Differencesஎன்ற ஆய்வின் மூலம் உளவியலாளர்களும் இதனை உறுதி செய்கிறார்கள். இந்த ஆய்வின் படி இரண்டு விதமான அடிப்படை சமூக தேவையே நம்மை ஃபேஸ்புக் நோக்கி இழுக்கிறது.1. சார்புநிலை - அடிப்படையில் சார்ந்து வாழும் மனநிலை கொண்ட மனிதர்கள்.. தன் இருப்பை எப்போதும் உறுதிபடுத்த எத்தனிப்பார்கள். அதே நேரத்தில் தன்னை அங்கீகரிக்க வ...
ஆப்ரேஷன் கமல் மங்கூஸ்

ஆப்ரேஷன் கமல் மங்கூஸ்

அரசியல், கட்டுரை
அனுப்புநர்:பாரக் ஓபாமா, ஜனாதிபதி, வெள்ளை மாளிகை, 1600 பென்சில்வேனியா ஏவ், வாஷிங்டன் டி.சி. - 20500, யுனைடேட் ஸ்டேட்ஸ். +1 202-456-1111.பெறுநர்:கமல் ஹாசன், இராஜ்கமல் இன்டர்நேஷ்னல் ஃப்லிம்ஸ், 218 டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. +91 44 24336348.மதிப்பிற்குரிய ஐயா,பொருள்: தாங்கள் அமெரிக்காவில் நுழைய விதித்த தடை குறித்து.எஃப்.பி.ஐ. யின் அறிக்கையின்படி தாங்கள் அமெரிக்க இறையாண்மைக்கு எதிரானவர் என்பது தெளிவாக நிரூபனமாகி உள்ளது. ஆகையால் தங்களுக்கு அமெரிக்காவில் நுழைய அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. தயாரிப்பாளார் பேரி ஆஸ்பெர்னின் அழைப்பின் பேரில் தாங்கள் ஹாலிவுட் படம் ஒன்றை இயக்கி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். அந்த ஒப்பந்தத்தை நீக்கும்படி பேரி ஆஸ்பெர்ன் அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். தாங்கள் இத்தடையை மீறி அமெரிக்காவி...
ஐ.ஐ.டி. என்னும் மாயை

ஐ.ஐ.டி. என்னும் மாயை

அரசியல், கட்டுரை
ஏழைகளுக்கு எட்டாக் கனி, நடுத்தர மக்களின் கனவு, அறிவை (!?) அடைய உதவும் ராஜபாட்டை. அதான் இந்தியாவின் உயர்கல்வி நிறுவனம் ஐ.ஐ.டி. இதில் படித்தால் போதும் உங்கள் வாழ்க்கையே மாறிவிடும். அறிவுக்கு  நம் அகராதியில் ஐ.ஐ.டி என்றும் பெயர் உண்டு (திரைப்படங்களில் கூட விஞ்ஞானிகள் பொல வருவார்களே!!)"மத்தாவா மாதிரி நானும் காலேஜ் படிச்சேன்.. மேரேஜ் பண்ணின்டேன்னு பேசிண்டு இருக்காம, படிச்சா ஐ.ஐ.டி ல தான் படிப்பேன்னு இப்பவே சங்கல்பம் செஞ்சுண்டு, மாமா ஆத்து டியூசனுக்கு புறப்படு. அதுக்கு முன்னாடி, பெருமாளண்ட நன்னா வேண்டிக்கோ.  27%  ரிசர்வேசன் வேணும்னு சொல்லிண்டு திரியும் அந்த நாயக்கர் ஆளுங்கெல்லாத்துக்கும்  நல்லா பாடம் கொடுண்ணு வேண்டிக்கோடா. சுப்ரீம் கோர்ட் நமக்கு எப்பவும் ஃபேவரா தான் இருக்கும். ம்ம்.. இருந்தும் என்ன செய்ய? கோபால்சாமி அய்யங்கார், கிருஷ்ணசாமி ஐயர், கே.எம் முன்ஷி ...
ஃபேஸ்புக் – தொழில்நுட்பத்தின் உச்சம்

ஃபேஸ்புக் – தொழில்நுட்பத்தின் உச்சம்

தொழில்நுட்பம்
மு.கு.:  'ஃபேஸ்புக் உங்களை விற்பது தெரியுமா?' என்ற வினவு தள பதிவிற்கு ஓர் எதிர்வினை.கூட்டமாக வாழ்ந்த மனிதன், தன்னை சுற்றி உள்ளவற்றில் இருந்து தன் சிந்தனையை வளமாக்கிக் கொண்டு எண்ணிலா சாதனைகள் பல படைத்திருக்கான். எனினும் மதம், இனம், நிறம், சாதி இத்யாதிகளுக்கு எல்லாம் தோற்றுவாயான பொருளாதாரம் என்னும் அதீத சக்தியின் பிடியில் சிக்குண்டு பிரிவிணைவாதிகளாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தருணத்தில், "மேக்கிங் தி வேர்ல்ட் மோர் ஓப்பன் அண்ட்  கணக்டட்" எனும் வாசகத்தோடு வரும் ஃபேஸ்புக் 100 கோடி மக்களை இணைத்து தொழில்நுட்பத்தின் உச்சத்தை தொட்டுள்ளது.ஃபேஸ்புக் ஒரு வெப்சைட் அதிலென்ன பெரிய தொழில்நுட்பம், வெங்காயம் என கேள்வி எழலாம். தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானம் எவ்வளவு சிக்கலான படைப்போ அதே போல் ஃபேஸ்புக்கும் மிக சிக்கலான பொறியியல் படைப்பின் உதாரணமே!பேஸ்புக்கின் நீள அகலம்:* 58...
கடவுளும் கணிப்பொறியும்

கடவுளும் கணிப்பொறியும்

கட்டுரை, சமூகம்
'தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணாலே(!?) உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனிதன் ஜீவாத்துமாவானான்.''கடவுள் மனிதனை மண்ணில் இருந்து தான் படைத்தாரா? சரி.. கடவுள் தான் மனிதனைப் படைத்தாரா?' இது போன்று சிக்கலான கேள்வியை எல்லாம் தொல்லியல் துறையினரிடம்  விட்டு விடுவோம். ஆனால் மனிதன் தன் சொந்த முயற்சியிலும், கடின உழைப்பிலும் இன்று உலகில் அனைவருக்கும் பயனை அள்ளித் தரும் கணிப்பொறியை மண்ணில் இருந்து தான் உருவாக்கி இருக்கிறான். சுமேரியர்கள் காலத்திலேயே இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே கணிப்பொறியை உருவாக்கினார்கள். இன்றைய எலக்ட்ரானிக் கணிப்பொறியின் வளர்ச்சியை, சார்லஸ் டார்வினின்  பரிணாமக் கொள்கையினோடு ஒப்பிட்டு சொல்லலாம். அதாவது எப்படி உயிரினங்களின் தோற்றம் படிப்படியாக ஒரு செல் உயிரில் இருந்து ஊர்வன, பறப்பன என தொடங்கியதோ, அதே போல் சிலிக்கா எனும் மண்ணில் இருந்...
கூகுள் தொடும் ரிஸ்க்

கூகுள் தொடும் ரிஸ்க்

தொழில்நுட்பம்
மனித மூளையின் அதீத படைப்புகளில் ஒன்றான கணிப்பொறி.. வன்பொருள் (ஹார்ட்வேர்) மற்றும் மென்பொருள் (சாஃப்ட்வேர்) என்னும் இரண்டு வேறுபட்ட பிரிவுகளின் தொகுப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டும் பெரும்பாலும் தனி தனி நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு பின் ஒன்றிணைக்கப் படுகின்றன. இதில் மென்பொருள் கட்டளைகளை இடுகிறது. வன்பொருள் அவற்றை நிறைவேற்றுகிறது. மென்பொருள் தொகுப்பின் மையமாக இயங்கு தளமும் (ஆப்ரேட்டிங் சிஸ்டம்), வன்பொருள் தொகுப்பின் மையமாக நுண்செயலியும் (மைக்ரோ ப்ராசஸர்) செயல்படுகின்றன. பொதுவாக கணிப்பொறியின் செயல்திறன் அதன் வேகத்தைக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. கணிப்பொறியின் வேகத்தை பல்வேறு காரணிகள் நிர்ணயிக்கின்றன. எனினும் மைக்ரோ ப்ரோசெசசெர் முக்கிய பங்குவகிக்கிறது. நுண்செயலி கணினியின் இதயமாகவும், இயங்கு தளம் கணினியின் மூளையாகவும் செயல்படுகிறது. மென்பொருள் தொகுப்புகள் நுண்செயலியின் வடிவமைப்பிற...
ப்ரெடேட்டர்ஸ்

ப்ரெடேட்டர்ஸ்

அயல் சினிமா, சினிமா
திடீரென வானத்தில் இருந்து மயக்கமுற்ற மனிதர்கள் தரை நோக்கி வீசப்படுகின்றனர். தரை தட்டும் முன் விழிப்படைவர்கள் அவசர அவசரமாக 'பாராச்சூட்'டினை இயக்கி காட்டினுள் இறங்குகின்றனர். அவர்கள் மொத்தம் 8 பேர். அந்த காட்டில் இருந்து வெளியேற ஏதேனும் வழி உள்ளதா என தேடி மலை உச்சியினை அடைகின்றனர். அங்கு அவர்கள் காணும் காட்சி அவர்களை உறைய வைக்கிறது.அவர்கள் வெறொரு கிரகத்தில் உள்ளனர். விசித்திர மிருகக் கூட்டம் ஒன்றால் தாக்கப்படுகின்றனர். அந்த கிரகத்தில் வேட்டையாடப் படுவதற்காக வரவழைக்கப் பட்டிருப்பதை உணர்கின்றனர். ஒருவர் பின் ஒருவராக இறக்க நாயகன் நாயகி மட்டும் உயிருடன் மிஞ்சும் பாரம்பரிய 'ஹாலிவுட் படம். வேற்று கிரகம், ப்ரெடேட்டர்ஸ், ஸ்பேஸ் ஷிப் என்ற வார்த்தைகள் எல்லாம் வருவதால் 'சையின்ஸ்- ஃபிக்ஷன் பிரிவில் இப்படம் அடக்கும்.ப்ரெடேட்டர்ஸ் முற்றும்.நாயகன், நாயகியை தவிர்த்து மீதமுள்ள ஆற...
அறிவாளிகள்

அறிவாளிகள்

கதை, படைப்புகள்
எவ்ளோ தடவ சொல்றது ஊரு பக்கம் போகாதன்னு இப்ப அழுது என்ன புண்ணியம் என்று சொன்னவாரு கூட்டத்திற்குள் நுழைந்தாள் எட்யாங். ஆம் அனுபவமும் அறிவும் ஒருங்கே பெற்றவள் அவள். அதனால் தான் கூட்டத்தின் தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்தி கொண்டிருந்தாள். அனைவரும் வானத்தை நோக்கி ஊளையிட்டு,  தலைவிக்கு மரியாதை செலுத்தினார்கள்.   கூட்டத்தின் செல்ல பிள்ளையான ரூஸ்  மனிதர்களால் கொடூரமாக கொல்லப்பட்டு மூன்று நாட்களே ஆன நிலையில், மாயா காயத்துடன் திரும்பி உள்ளான். " நாம்ப எல்லாம் சபிக்க பட்டவங்க எப்பவும் நம் இனம் மனிதர்களுக்கு அடிமைகள் தான் இவங்கள கட்டுபடுத்த யாருமே இல்லையா?" என்று ஒரு குரல் கூட்டத்தின் மத்தியில் ஒலித்தது. அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். "ஏன் இல்லை கடவுள் இருக்கிறார்".. என்று பேசத்தொடங்கினாள் எட்யாங். "கடவுளா ?? என்ன பெரிய கடவுள் மனிசங்களுக்கு மட்டும் எல...