Shadow

Tag: மணவை புவன்

காடுவெட்டி விமர்சனம்

காடுவெட்டி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காடுவெட்டி குருவைப் பற்றிய கதை இல்லை இப்படம். ஆனால், காடுவெட்டி என்கிற தலைப்பைப் பார்த்ததும், அதன் அரசியல் என்னவாக இருக்கும் என யூகிக்கிறார்களோ, அதை ஒரு சதவிகிதம் கூட ஏமாற்றாமல் தந்துள்ளனர். ஆணவக் கொலைகளுக்குக் காரணம் ஆதிக்க சாதியினர் இல்லை என்றும், அதற்கு யார் உண்மையில் காரணம் என்றும், ஓர் அரிய கண்டுபிடிப்பையே நிகழ்த்தியுள்ளார் இயக்குநர் சோலை ஆறுமுகம். நகரத்தில் ஒரு காதல் ஜோடி. வெவ்வேறு சாதியைச் சார்ந்த அந்த ஜோடிக்குப் பெற்றோர்களே முன் நின்று கல்யாணம் பண்ணி வைக்கிறார்கள். அடுத்து, அதே ஜோடி, அதே குடும்பம், அதே ஜோடி, அதே பெற்றோர்கள், அதே காதல் கிராமத்தில் நிகழ்ந்தால், அதற்குப் பின்னணியில் என்னவெல்லாம் நடக்கும் என இரண்டு கதைகளை ஒப்பிடுகிறார். நகரத்துக் காதல் சுபமாகிறது, கிராமத்துக் காதல் ஏன் ஆணவக்கொலையில் முடிகிறது என கதை பயணிக்கிறது. படத்திற்குக் கதையும் தயார், அரசியலும் தயார், ஆனால் பாவ...
பேய காணோம் விமர்சனம்

பேய காணோம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படாதபாடுபட்டு ஒரு தயாரிப்பாளரைப் பிடித்து, படமொன்றை இயக்கச் செல்கிறார் செல்வ அன்பரசன். அங்கே நடக்கும் அமானுஷ்யமான சம்பவங்களால், அதுவரை எடுக்கப்பட்ட படம் அனைத்தும் வினோதமான முறையில் மறைந்துவிடுகிறது. காணாமல் போன ஒரு பேய்தான் அதற்கு காரணமான தெரிய வருகிறது. பேயைக் கண்டுபிடித்துப் படத்தை முடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. பேயாக மீரா மிதுன் நடித்துள்ளார். ஒப்பனை கலைஞருக்கு யார் மீது என்ன கோபமோ என்ற எண்ணத்தை எழுப்பும் வண்ணம், மீரா மிதுனிற்கான ஒப்பனை அமைந்துள்ளது. நாயகனாக G. கெளசிக்கும், நாயகியாக சந்தியா ராமசந்திரனும் நடித்துள்ளனர். நகைச்சுவைக்கு உதவாத பாத்திரத்தில் முல்லை கோதண்டம் தோன்றியுள்ளார். கதை, திரைக்கதையும் மிகவும் பலவீனமாக உள்ளது. ஃப்ளாஷ்-பேக் காட்சிகயில் வரும் தருண் கோபி – மீரா மிதுன் கதையும் கூட ரசிக்கும்படியாக எடுக்கப்படவில்லை. படத்திற்குள் எடுக்கப்படும் படத்தை இயக்குபவர...
Dr. 56 விமர்சனம்

Dr. 56 விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அம்பத்தாறு நிமிடங்களுக்கு ஒருமுறை மாத்திரை எடுத்துக் கொள்ளாவிட்டால் இறந்துவிடக்கூடிய நபரொருவர், ஒரு விஞ்ஞானியையும் இரண்டு மருத்துவர்களையும் கொன்ற குற்றத்திற்காக்க் கைது செய்யப்படுகிறார். அவர் யார், அவருக்கும் அந்தக் கொலைகளுக்கும் தொடர்பு என்பதே படத்தின் கதை. அந்தக் கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரியாக பிரியாமணி நடித்துள்ளார். மிடுக்கான நடை, அலட்சியமான பார்வை என்று புறத்தோற்றத்தில் அசத்தலான அதிகாரியாக உள்ளார். கிடைக்கும் துப்புகளை ஒருவரைச் சட்டென கைதும் செய்துவிடுகிறார். ஆனால், உண்மையான குற்றவாளியோ, வழக்கிற்கு உதவுவது போல் ப்ரியாமணியிடம் குற்றத்தைப் பற்றி ஒப்பிக்கிறார். ‘சாவதற்கு முன் உண்மைகளை சி.பி.ஐ. அதிகாரி அறிந்து கொள்ளட்டுமே!’ என்ற நல்லெண்ண அடிப்படையில் வில்லன் செயல்படுவது திரைக்கதைக்கு வேட்டு வைக்கும் காரியம். குற்றங்களை மூடி மறைப்பதோடு மட்டுமல்லாமல், சிபிஐ அதிகாரியையே கொல...
ரிலாக்ஸ் – மூன்று பெண்களால் காதலிக்கப்படும் நாயகன்

ரிலாக்ஸ் – மூன்று பெண்களால் காதலிக்கப்படும் நாயகன்

சினிமா, திரைச் செய்தி
ட்ரீம் ஸ்டோரி சினிமா கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்திற்கு ரிலாக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். கவிஞர் வாலி மற்றும் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியதோடு, ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த 'புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்' என்ற படத்தை இயக்கிய தம்பி சையது இப்ராஹிம் என்ற ஸ்ரீ இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய டேவி சுரேஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாடலாசிரியர் பழனி பாரதி அனைத்து பாடல்களையும் எழுதுகிறார். ஹிந்தியில் வெளியான 'திருட்டுப்பயலே 2' படத்திற்கு எடிட்டிங் செய்த ராம் சதீஷ் இந்தப் படத்திற்கு எடி...
கடமையை செய் விமர்சனம்

கடமையை செய் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'முத்தின கத்திரிக்கா' படத்தை இயக்கிய வெங்கட் ராகவனின் அடுத்த படைப்பு. இவர் இயக்குநர் சுந்தர். சி-யிடன் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். சிவில் இன்ஜினியரான எஸ்.ஜே.சூர்யா, தேவ் பில்டர்ஸ் கட்டிய அடுக்குமாடி கட்டடமொன்று இடிந்து விழும் தருவாயில் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அவரைப் பேசவிடாமல் செய்ய, வேன் இடித்து அவரைக் கொல்லப் பார்க்கின்றனர். அவ்விபத்தால், அவர் ஸ்டூப்பர் (Stupor) நிலைக்குச் சென்றுவிடுகிறார். அதாவது, மூளை விழிப்பு நிலையில் இருந்தாலும், உடல் இயக்கம் ஸ்தம்பித்துவிடும். அவர், தன்னைச் சுற்றி நடப்பனவற்றை அனைத்தையும் கவனிப்பார், பேச நினைப்பார் ஆனால் அவரால் முடியாது. இந்தக் குறைபாடுகளை மீறி எப்படி எஸ்.ஜே.சூர்யா, அந்தக் குடியிருப்பில் வாழ்பவர்களை எப்படிக் காப்பாற்றுகின்றார் என்பதுதான் படத்தின் கதை. மிக சீரியசான கதையில், சேஷு, மொட்டை ராஜேந்திரன் போன்றோர்களைக் கொண்டு நகைச்சுவைக்கும் ...
“பாகவதர் காலத்துல இருந்து சினிமாவில் வராத கதை” – எஸ்.ஜே.சூர்யா

“பாகவதர் காலத்துல இருந்து சினிமாவில் வராத கதை” – எஸ்.ஜே.சூர்யா

சினிமா, திரைத் துளி
சுந்தர்.சி-யிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் வெங்கட் ராகவன், “கடமையை செய்” எனும் படத்தை இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆன்ந்த், மொட்டை ராஜேந்திரன், சேஷு, வின்சென்ட் அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்பட்த்தைப் பற்றிப் பேசிய எஸ்.ஜே. சூர்யா, “தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து, அதாவது சினிமா தோன்றிய காலத்திருந்து வராத கதையை இயக்குநர் எடுத்துள்ளார். அதை என்னால் உறுதியாகக் கூற முடியும். கோமா பற்றி நம்ம எல்லாருக்கும் தெரியும். அதில் ஸ்டூப்பர்ன்னு ஒன்னிருக்கு. கோமா என்றால், ப்ரெயின் டெத், பாடி டெத், ஆனா உள்ளிருக்க்க் கூடிய இன்னர் ஆர்கன்ஸ் மட்டும் வொர்க் பண்ணிட்டிருக்கும். அதாவது, ஹார்ட், கிட்னி போண்றவை வொர்க் பண்ணும். ஆனா மொத்த சிஸ்டம் ஷட். ஸ்டூப்பர் என்பது என்னென்னா, ப்ரெயின் ஆக்டிவாக இருக்கும். பாடி டெத். அவனால் பேச முடியும். ஆனா வெளில இருக்கிறவங்களுக்குக் கேட்காது. அப்படியொ...
திரெளபதி விமர்சனம்

திரெளபதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தென்னாற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களில் 'திரெளபதி அம்மன்' கோயிலும், அக்கோவிலில் நிகழும் சித்திரை தீ மிதி திருவிழாவும் மிகவும் பிரசித்தி. விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தில் கதை நிகழுவதாகக் காட்டப்படும் இப்படத்தின் பிரதான பெண் பாத்திரத்தின் பெயர் திரெளபதி. ஊருக்கு ஒன்றெனில் முதலாளாக முன்னிற்கும் தைரியமான பெண்மணி. இவரைப் போலவே, படத்தில் இன்னும் இரண்டு பெண் பாத்திரங்களும் வலுவானதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் முறையே ஓர் அரசு மருத்துவரும், ஒரு பத்திரிகையாளரும் ஆவர். தைரியமான பெண் என்பதற்கான குறியீடாய் இத்தலைப்பினைக் கொள்ளலாம். பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத ட்ரெய்லரின் மூலம் அருமையான கவன ஈர்ப்பினைப் பெற்றுவிட்டது படம். படத்தின் வில்லனாக இயக்குநர் யாரைச் சுட்டுகிறார் என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகத் தெரிகிறது. எனினும், மிகப் புத்திசாலித்தனமாய், ஒரு பொதுப் பிரச்சனையைப் பற்றிப் ...
மயூரன் விமர்சனம்

மயூரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மயூரன் என்றால் 'உன்னைக் காப்பவன்' அல்லது 'வெற்றி புனைபவன்' என்கிறார் இயக்குநர் நந்தன் சுப்பராயன். இவர் பாலாவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். 'உன்னைக் காப்பவன்' என்ற பொருளே படத்தின் தலைப்பிற்குப் பொருந்தும். அதனால் தா  நாயகனுக்கு சேகு எனும் சே குவேரா என்று பெயர் சூட்டியுள்ளார் இயக்குநர். சிதம்பரத்திலுள்ள பொறியியல் கல்லூரி விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் நாயகனின் அறை தோழன் ஒருவன் காணாமல் போகிறான். அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதும், அவனைத் தேடும் நாயகனுக்கு என்ன சிக்கல் ஏற்படுகிறது என்பதும்தான் படத்தின் கதை. மயூரனாகிய நாயகனால் தன் நண்பனைக் காப்பாற்ற முடியவில்லை. அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியவே மிகவும் மெனக்கெடுகிறான். தனக்கு ஏதும் நிகழாமல் தன்னைத் தானே நாயகன் காப்பாற்றிக் கொள்வதுதான் படத்தின் க்ளைமேக்ஸ். மயூரன் தன்னைக் காப்பாற்றிக் கொள்பவனாகச் சுருங்கிக் கொள்கிறான். படத்தி...
மல்லி – ராஜா ராணி ஃபேன்டசி படம்

மல்லி – ராஜா ராணி ஃபேன்டசி படம்

சினிமா, திரைத் துளி
முத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க, ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் 'மல்லி'. ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மஞ்சு தீக்ஷித் நடித்துள்ளார். மற்றும் டெலிஃபோன் ராஜ், ரவிச்சந்திரன், அருண்ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு இவர்களுடன் வில்லனாக JVR நடித்துள்ளார். "பெற்றோரின் காதல் எதிர்ப்பிற்குப் பயந்து வீட்டை விட்டு ஓடிவரும் காதல் ஜோடி ஒரு காட்டு பங்களாவில் தங்குகிறார்கள். அவர்களுக்கு ஊரில் இருந்த நண்பர்கள் மூன்று பேர் அங்கு வந்து உதவி செய்து அவர்களை ராஜா – ராணி போல் பார்த்துக் கொள்கிறார்கள். மர்மமான முறையில் காதலர்கள் நிஜமாகவே ராஜா ராணி ஆகிறார்கள். அது எப்படி அப்படி ஆனார்கள்? உதவ வந்தவர்கள் யார்? அவர்கள் யாருக்கு எப்படி அரசாட்சி செய்கிறார்கள்? அவர்களுடைய மக்கள் யார்? என்ற கோணத்தில் திரைக்கதை இருக்கும். இறுதியில் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு ஊர் திரும்புகின்றனர...
நிகிஷா பட்டேலின் லட்சியம்

நிகிஷா பட்டேலின் லட்சியம்

சினிமா, திரைத் துளி
"பிக் பாஸ் புகழ் ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படம் தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரியளவில் இருக்கிறது. இப்படத்தைத் தல அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சரண் இயக்கியுள்ளார். படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல்கள் மிக அற்புதமாய் வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் ஃபஎஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது . இப்படத்தைத் தவிர எழில் சார் இயக்கியுள்ள, 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்திலும், இயக்குநர் கஸ்தூரி ராஜா சார் இயக்கத்தில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகின்ற 'பாண்டி முனி' படத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெயரிடப்படாத படத்திலும், நடிகர் நந்தாவுக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும் நடித்து வருகிறேன்...
மயூரன் – உன்னைக் காப்பவன்

மயூரன் – உன்னைக் காப்பவன்

சினிமா, திரைத் துளி
கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் மயூரன். மயூரன் என்றால் விரைந்து உன்னைக் காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். மயூரன் பற்றி இயக்குநர் நந்தன் சுப்பராயன், "மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே நிர்பந்தங்களும் நெருக்கடிகளும் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகத்தான் இருக்கிறது. நிர்பந்தங்கள் இல்லாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் நிர்பந்தத்திற்கு பணியாதவர்கள் போராளிகள். இங்கு அதிர்ஷ்டசாலிகளைவிடப் போராளிகளே அதிகம். நியாயத்தின் பக்கம் நிற்கும் யாவருக்கும் அதிகாரம் படைத்தவர்களின் பரிசு எப்போதும் உயிர் பயம் காட்டுவது தான், அதற்கு நல்லவர்கள் கொடுக்கும் விலை தனிமை. யார் கண்ணிலும் படாத தலைமறைவு வாழ்க்கை மற்றும் உனக்கு எதுக்கு வம்பு எனும் அறிவுரைகள் மட்டும்தான். சொல்லிக் கொடுக்கப்பட்ட மரபுகளிலிருந்து விலகி நிற்பவனை உலகம் வேறு விதமாகத்தான் பார்க்...
பூவே போகாதே – 80களின் கல்லூரிக் காதல் கதை

பூவே போகாதே – 80களின் கல்லூரிக் காதல் கதை

சினிமா, திரைத் துளி
கோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சத்யபிரமீலா தயாரிக்கும் படம் "பூவே போகாதே". "இப்படம் 1980 களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம். முழுக்க முழுக்க நாயகன், நாயகியைச் சுற்றி நடக்கும் திரைக்கதை இது. கல்லூரியில் படிக்கும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது. அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளை எப்படி கையாள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை அந்தக் காலகட்டத்தில் காதலை இந்தச் சமூகம் எப்படிப் பார்த்தது என்பதை அழுத்தமாகப் பதிவிட்டுள்ளோம். தங்களின் காதலுக்கு வந்த எதிர்ப்புக்களை மீறி எப்படி காதல் ஜோடி சேர்ந்தார்கள் என்பதைக் கமர்ஷியலாகச் சொல்லியிருக்கிறோம்" என்றார் படத்தின் இயக்குநர் நவீன் நயனி. இந்தப் படத்தில் தருண் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக லாவண்யா நடித்துள்ளார். மற்றும் கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், ...
ஓவியாவ விட்டா யாரு விமர்சனம்

ஓவியாவ விட்டா யாரு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சுயதொழிலில் ஈடுபட நினைக்கும் பட்டதாரி இளைஞன் சீனி தன் பணத்தைப் பறிகொடுக்கிறான். இங்கு நேர்மையாக இருந்தால் வேலைக்காவது என உணர்ந்து, மண்ணுளி பாம்பு, நவரத்தினக் கல், சஞ்சீவி வேர் என சதுரங்கவேட்டையில் ஈடுபடுகிறான். அவன் நேர்மையாகத் தொழிலில் ஈடுபட்டானா அல்லது சதுரங்க வேட்டையில் வேட்டையாடப்பட்டானா என்பதுதான் படத்தின் கதை. 'சீனி' என்ற தலைப்பில்தான் இப்படம் எடுத்து முடிக்கப்பட்டது. இந்தப் படத்தின் கதாநாயகியான ஓவியாவிற்கு, 'பிக் பாஸ்' சீசன் 1-இல் கிடைத்த எதிர்பாராத புகழின் காரணமாக ஓவியா எனத் தலைப்பு மாற்றப்பட்டது. அதாவது, 'ஓவியாவ விட்டா யாரு' என்று. பல நாள் கிடப்பில் இருந்து, மிகுந்த சிரமத்திற்கு இடையில் வெளியாகியுள்ள படம். KCR பிக்சர்ஸ் சார்பாக மதுரை செல்வம் தயாரித்துள்ளார். திவ்யா எனும் பாத்திரத்தில், தந்தி டிவி நிருபராக நடித்துள்ளார் ஓவியா. க்ளைமேக்ஸில், ஆபத்தில் சிக்கும் நாயகனை மீட்பதும் இவ...