Shadow

Tag: மணிகண்டன்

குடும்பஸ்தன் விமர்சனம்

குடும்பஸ்தன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
'குடும்பஸ்தனா வெற்றிகரமான வாழ்க்கை வாழணும்ன்னா வளைஞ்சி நெளிஞ்சி தான் ஆகணும்' என்றும், 'அப்படிலாம் வளைஞ்சி நெளியணும்ன்னு தேவையில்ல' என்றும் இரு தரப்பு மல்லுக்கட்டுகிறது. அந்தக் குடும்ப மல்லுக்கட்டு ஈகோவில் எந்தக் கொள்கை முந்துகிறது என்பதே குடும்பஸ்தன் கதையாகும். கதையின் சின்ன லைனாக இதை எடுத்துக் கொண்டாலும், இன்னும் சில அழகான லேயர்ஸை வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி. மணிகண்டன் காதலித்து வீட்டார் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்கிறார். காதல் மனைவி சான்வே மேகனாவிற்கு கலெக்டராக வேண்டும் என்பது இலக்கு. அப்பா ஆர்.சுந்தர்ராஜனுக்குத் தனது பழைய வீட்டைச் சீர் செய்ய வேண்டும் என்பது இலக்கு. அம்மாவிற்கோ 50 ஆயிரம் ரூபாய் பேக்கேஜில் ஆன்மிக டூர் போக வேண்டும் என்பது இலக்கு. இத்தனை பேர்களின் இலக்குகளுக்கும் நமது ஹீரோ மணிகண்டனே பொறுப்பு. தனது அக்கா கணவர் குரு சோமசுந்தரத்தின் ஈகோ முன் தடுமாறிடக்கூடாது ...
லவ்வர் விமர்சனம்

லவ்வர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
80 மற்றும் 90களின் காலகட்ட காதல்களில் தொண்ணூறு சதவீதத்திற்கும் மேலான காதல்கள் சொல்லாமலே முடிந்து போயிருக்கும்.  ஆனால் இன்றைய 21ம் நூற்றாண்டுத் தலைமுறையின் காதல்கள், பார்த்த மறுகணத்தில் காதலைச் சொல்லியும், காதலியுடன் கை கோர்த்து சுற்றியும், ஒன்றாக பழகியும், படுக்கையை பகிர்ந்தும் கூட தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமான காதல்கள் கல்யாணத்தில் கைகூடாமல் கலைந்துவிடுகிறது.  படுக்கையை பகிர்வதையே உச்சகட்ட லட்சியமாகக் கொண்டு இயங்கியிருக்கும் காதல்கள் அதில் சில பல இருக்கலாம். ஆனால் அவைகளையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் உண்மையாகவே காதலை வாழ்க்கைத் துணைக்கான தேடலாகப் பார்த்தோ, இல்லை காதலியையோ காதலனையோ உருகி உருகி உண்மையாக காதலிப்போர் கூட இறுதியில் சேராமல் பிரிந்துவிடுகிறார்கள்.  அதன் பின்னணியில் உள்ள சமூகவியலையும் உளவியலையும் ஒரு சேர பேசும் படம் தான் “லவ்வர்”. கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து வர...
அட்லீ தயாரிக்கும் பாலிவுட் திரைப்படம் “பேபி ஜான்” மே 31ல் வெளியாகும்

அட்லீ தயாரிக்கும் பாலிவுட் திரைப்படம் “பேபி ஜான்” மே 31ல் வெளியாகும்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் திரைப்படத்திற்கு 'பேபி ஜான்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் டைட்டிலுக்கான சிறப்பு வீடியோவும் வெளியானது.இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பேபி ஜான்'. இதில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி 1‌ ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள...
லவ்வர் | சமூகத்திற்குச் சொல்லப்பட வேண்டிய கதை

லவ்வர் | சமூகத்திற்குச் சொல்லப்பட வேண்டிய கதை

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் இந்தப் படத்தின் படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ்ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக நடைபெற்...
உதவி இயக்குநர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அட்லீயின் “ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ்”  நிறுவனம்

உதவி இயக்குநர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அட்லீயின் “ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ்” நிறுவனம்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் 'VD18 ' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் 'VD18' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தி திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி 1‌ ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரி...
மீண்டும் மணிகண்டனுடன் இணைந்த ‘குட் நைட்’ தயாரிப்பாளர்கள்

மீண்டும் மணிகண்டனுடன் இணைந்த ‘குட் நைட்’ தயாரிப்பாளர்கள்

சினிமா, திரைச் செய்தி
பெரியஹீரோக்களின் படம் மட்டுமே  தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியான வரவேற்பு மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்று தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது குட்நைட்.அப்படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் அடுத்தபடம் தயாராகிறது. நசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் படத்தை தயாரிக்கிறார்கள்.இந்தப்படத்திலும் ஒரு புது இயக்குநர் அறிமுகமாகிறார்.பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் இந்தப் புதியபடத்தில் குட்நைட்  மணிகண்டனே கதாநாயகனாக நடிக்கிறார். மாடர்ன் லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக  நடிக்கிறார். கண்ணாரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இசை ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு பரத் விக்ரமன், கலை ராஜ்கமல் பாடல்கள் மோகன்ராஜன் என ...
குட் நைட் விமர்சனம்

குட் நைட் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நாம் அன்றாடம் வாழ்வில் கடக்கும் தருணங்களை சிறந்த கலைப்படைப்பாக மாற்றும் சினிமாக்கள் மலையாளத்தில் தான் அடிக்கடி வரும் என்ற பிம்பத்தைத் தமிழ் சினிமா நொறுக்கத் துவங்கியுள்ளது. அதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது குட்நைட் படம். படத்தின் கதைப்படி ஹீரோ மணிகண்டனுக்கு குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. அவரை அறியாமல் அவர் விடும் குறட்டைச் சத்தம் தன் வீட்டையும் தாண்டிக் கேட்கும் அளவிற்கு வலிமையுடையது. அந்தக் குறட்டைச் சத்தத்தால் அவரது அக/புற வாழ்வில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்தான் படத்தின் திரைக்கதை. எல்லா மனிதர்களோடும் நிச்சயமாக கனெக்ட் ஆகக் கூடிய கதை என்பதால் கதை மாந்தர்கள் அனைவருமே நமக்கு நெருக்கமாகி விடுகிறார்கள். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...’ படத்தின் விஜய்சேதுபதியை சில இடங்களில் நினைவூட்டினாலும், அளவுக்கு அதிகமாகவே ரசிக்க வைக்கிறார் ஹீரோ மணிகண்டன். அவரது மச்சானாக வரும் ரமேஷ் தி...
ஜெய் பீம் விமர்சனம்

ஜெய் பீம் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
'ஆர்ட்டிகிள் 15' போல் ஒரு திரைப்படம் தமிழில் வராதா என்ற ஏக்கத்தைப் பூர்த்தி செய்துள்ளது ஜெய் பீம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், காண்பவர்கள் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கி வருகிறது. நம்முடன் வாழும் சக மனிதர்கள் இத்தகைய கொடுமைகளை அனுபவிக்கின்றனரா என பொதுச் சமூகத்தின் அங்கலாய்ப்பை சமூக ஊடகங்கள் எங்கும் காண முடிகிறது. படத்தின் மாபெரும் வெற்றிக்கு அவை கட்டியம் கூறுகின்றன. காவல்காரர்கள் எப்படி இருளர்கள் மீதும், குறவர்கள் மீதும் பொய் வழக்குகளைப் போட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சின்னாபின்னமாக்குகிறார்கள் எனும் குரூரமான உண்மையைத் தொட்டு படம் தொடங்குகிறது. அப்படி கைது செய்யப்படும் ராசாகண்ணு எனும் இருளர் இளைஞனைப் போலீஸ் அடித்து நையப்புடைக்கிறது. அவரது மனைவி செங்கேணி, வக்கீல் சந்துருவின் உதவியை நாடுகிறார். மனித உரிமை வழக்குகளுக்காகா ஆஜாராகும் வக்கீல் சந்துரு, காவல்...