Shadow

Tag: மதன்

லவ்வர் விமர்சனம்

லவ்வர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
80 மற்றும் 90களின் காலகட்ட காதல்களில் தொண்ணூறு சதவீதத்திற்கும் மேலான காதல்கள் சொல்லாமலே முடிந்து போயிருக்கும்.  ஆனால் இன்றைய 21ம் நூற்றாண்டுத் தலைமுறையின் காதல்கள், பார்த்த மறுகணத்தில் காதலைச் சொல்லியும், காதலியுடன் கை கோர்த்து சுற்றியும், ஒன்றாக பழகியும், படுக்கையை பகிர்ந்தும் கூட தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமான காதல்கள் கல்யாணத்தில் கைகூடாமல் கலைந்துவிடுகிறது.  படுக்கையை பகிர்வதையே உச்சகட்ட லட்சியமாகக் கொண்டு இயங்கியிருக்கும் காதல்கள் அதில் சில பல இருக்கலாம். ஆனால் அவைகளையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் உண்மையாகவே காதலை வாழ்க்கைத் துணைக்கான தேடலாகப் பார்த்தோ, இல்லை காதலியையோ காதலனையோ உருகி உருகி உண்மையாக காதலிப்போர் கூட இறுதியில் சேராமல் பிரிந்துவிடுகிறார்கள்.  அதன் பின்னணியில் உள்ள சமூகவியலையும் உளவியலையும் ஒரு சேர பேசும் படம் தான் “லவ்வர்”. கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து வர...
நூடுல்ஸ் விமர்சனம் :

நூடுல்ஸ் விமர்சனம் :

சினிமா, திரை விமர்சனம்
ஒரு சாமானியனுக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்குமான ஈகோ மோதல் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே “நூடுல்ஸ்” திரைப்படத்தின் ஒன்லைன்.‘தில்’ ‘அய்யப்பனும் கோஷியும்’ போன்ற படங்களிலும் இந்த ஒன்லைனரை காண முடியும். படம் துவங்கும் போது ஒரு மலையாளத் திரைப்படத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றியது. அந்த அளவிற்கு யதார்த்தமான ஒரு மேக்கிங்.ஒரு சனிக்கிழமை இரவு நேரத்தில் ஒரு சிறிய அப்பார்ட்மெண்ட் ஒன்றின் குடியிருப்புவாசிகள் மொட்டை மாடியில் கூடி பாட்டுக்குப் பாட்டு போட்டி வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது. எல்லா சனிக்கிழமை இரவுகளிலும் இது அவர்களின் வழமை என்பதும் தெரிய வருகிறது. விளையாட்டின் உற்சாகத்தில் சத்தம் சற்று அதிகமாக இருக்கிறது.  இதை தொந்தரவாக நினைத்த யாரோ போலீஸில் புகார் தெரிவிக்க, கீழே அதே தெருவில் ரோந்து சென்று கொண்டிருக்கும் அந்த ...