Shadow

Tag: மதுமிலா

செஞ்சிட்டாளே என் காதல விமர்சனம்

செஞ்சிட்டாளே என் காதல விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பே கதை. நாயகனைக் கழற்றி விட்டு விடுகிறார் நாயகி. பின் நாயகனின் நிலை என்ன ஆனதென்றும், அவனை ஏமாற்றிய நாயகியை அவன் என்ன செய்தான் என்பதும்தான் படத்தின் கதை. நாயகனின் மனநிலையை அலசியது போல், நாயகியின் மனமாற்றத்திற்கான காரணத்தை அலசாமல், ‘சில பொண்ணுங்க இப்படித்தான்! ஆள் மாத்திட்டுப் போயிட்டே இருப்பாங்க’ என்ற வலிந்து திணிக்கப்பட்ட தொனியை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். 106 நிமிடங்களே படம்! படத்தின் முதற்பாதி போனதே தெரியாமல் விறுவிறுப்பாய்ச் செல்கிறது. ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் நாயகனின் அம்மாவும் தங்கையும், தூக்கில் தொங்குவதற்காகக் கட்டப்பட்டிருக்கும் துணியை நடு வீட்டில் காண்கின்றனர். நாயகனை ஐந்து நாட்களாகக் காணவில்லை. அவனைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்காமல் தவிக்கின்றனர் அவனது நண்பர்கள். இடையிடையே, நாயகனுக்கும் நாயகிக்கும் எப்படிக் காதல் மலர்கின்றதெனச் சொல்கின்றனர். இரண்டாம் பாதியில...