‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ – சிறப்பு
விரைவில் நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான 'தமிழ்நாடு பிரிமீயர் லீக்' கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் பல்வேறு அணிகளில் ஒன்றான 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' நேற்று சென்னையில் தங்கள் அணியின் வீரர்களை க்ரிக்கெட் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
இந்திய அணியின் தலைச் சிறந்த ஆட்டக்காரரும், அதிரடி ஓப்பனிங் வீரருமான விரேந்தர் சேவாக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். "தமிழ்நாடு பிரிமீயர் லீக்' வெறும் ஒரு கிரிக்கெட் போட்டி என்பதையும் தாண்டி, மாநில அளவில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு சிறந்த அடித்தளமாகவும் விளங்குகின்றது. இந்த 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' அணிக்காக நீங்கள் விளையாடும் ஆட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் காண இருக்கிறது. இதன் அணியில் இருந்து பல வீரர்கள் ஏ-கிளாஸ் கிரிக்கெட்டிலும், சர்வதேப் போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். அதற்கு என் வாழ்த்துகள்" என்று 'மதுரை சூப்பர் ஜ...