விந்தன்
மாயலோகத்தில்..
விந்தனின் இயற்பெயர் கோவிந்தன். இவர் 1916இல் செங்கல்பட்டு மாவட்டம், நாவலூர் என்கிற சிறிய ஊரில் பிறந்தார்.
வறுமையான குடும்பச் சூழ்நிலை. நடுநிலைப் பள்ளியைக் கூடத் தாண்டாத பருவத்தில், பிழைப்புக்காகத் தனது தந்தையுடன் சிறியச் சிறிய வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சில காலம் சென்ற பின், இரவுப் பள்ளியிலும், தொடர்ந்து ஓவியக் கல்லூரியிலும் சேர்ந்து ஓவியமும் கற்கத் தலைப்பட்டார். ஆனால் வறுமை அவரைத் துரத்தியது. பாதியிலேயே விட்டுவிடும்படியாகவும் ஆகிவிட்டது.
ஓர் அச்சகத்தில் அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாகச் சேர்ந்தார். தொழிலை இங்கு நன்றாகக் கற்றுக் கொண்டவருக்கு சில காலத்திற்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சகத்தில்அச்சுக் கோர்க்கும் வேலை கிடைத்தது. விகடனில் வேலை செய்து வந்த காலத்தில், அவர்களுக்குத் தெரியாமல் சில கதைகளை எழுதி, அவைகள் 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் வெளிவந்திருக்கிறத...