மனுஷங்கடா விமர்சனம்
படத்தின் முடிவில், "நாங்களும் மனிதர்கள் தான்டா!" என்று கையறு நிலையில் இடுகாட்டில் அழுது புரண்டு அரற்றுகிறார் கோலப்பன். பரியேறும் பெருமாள் படத்தினைத் தொடர்ந்து, தலித்கள் அனுபவிக்கும் கொடுமையை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் பேசுகிறது 'மனுஷங்கடா' திரைப்படம்.
இந்தப் படம் முடிந்து வெளிவந்ததும், இரண்டு பேர் பேசிக் கொண்டது. "இன்னுமா இப்படிலாம் இருக்கு? என்னமோ படம் எடுக்கிறாங்க!" என்று அலுத்துக் கொண்டார் ஒருவர். அவருடன் வந்த நண்பர், "இன்னும் எங்க கிராமத்தில் இப்படித்தான்ங்க. வேட்டியைக் கூட மடிச்சுக் கட்டக்கூடாது" என்றார். பூனை கண்ணை மூடிக் கொண்டு, உலகம் இருட்டாகிவிட்டது என நினைத்துக் கொள்ளுமாம். அது போல், சமூகம் என்பது தனக்குத் தெரிந்த நான்கு சுவர்கள் மட்டுமே என்ற அறியாமையில் மக்கள் உழல்கின்றனர். அவர்களிடம் உண்மையைக் கொண்டு செல்ல, இது போன்ற படங்கள் மிகவும் அவசியமாகிறது.
வழக்கமான திரைப்படம் போல...