தமிழின் இன்றைய நிலை – கவிஞர் மனுஷ்யபுத்திரன்
தமிழ்த்திரை உலகின் முன்னணி கதை வசனகர்த்தாக்களில் ஒருவரான கண்மணி ராஜாமுகமது எழுதிய, "பால்யகால சொர்கவெளி (கவிதைத் தொகுப்பு)”, "நீங்கள் அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை (சிறுகதைத் தொகுப்பு)” நூல்கள் வெளியீட்டு விழா, நேற்று மாலை சென்னை மைலாப்பூர் கவிக்கோ அரங்கில் நடைபெற்றது.
கவிஞர் மனுஷ்யபுத்திரன் நூல்களை வெளியிட ராஜ் டிவி ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். கவிஞர் இசாக், விழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, M.M.அப்துல்லா வரவேற்றுப் பேசினார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசுகையில், "பேச்சு வழக்கில் தமிழ்ச் சொற்களின் பயன்பாடு சுருங்கி, நாம் ஏறத்தாழ அவற்றை இழந்து வருகிறோம். இப்போதெல்லம் நல்லவற்றைக் குறித்து சொல்லும் போது 'செம' என்றும் சரியில்ல என்பதற்கு 'மொக்கை' என்றும் சாதரணமாக அனைவரும் சொல்லப் பழகிவிட்டனர். நம் பண்பாடு, கலாச்சாரத்தின் இனிய சொற்களை இழந்து வருவது, தமிழ்ச் சமூகத்தின் முக்கிய பிரச்ச...