Shadow

Tag: மம்தா

தடையறத் தாக்க விமர்சனம்

தடையறத் தாக்க விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படம் தொடங்கிய முதல் ஃப்ரேம்மில் இருந்து பார்வையாளர்களைக் கட்டிப் போட முடியுமா? அதை சாத்தியமாக்கி இருக்கார் மகிழ் திருமேனி. கதை சொல்லும் பாணியில் அவரது முதல் படமான முன்தினம் பார்த்தேனே படத்தில் இருந்து ரொம்பவே வித்தியாசப்படுத்தி உள்ளார். அப்பொழுது வந்திருந்த விண்ணத் தாண்டி வருவாயா போலவே அவரது முதல் படம் இருந்ததோடு, வாய்ஸ்-ஓவர் என்னும் கெளதம் வாசு தேவ் மேனனின் ஸ்டைல் படம் முழுக்க விரவி இருந்தது. அவரிடம் அசோசியேட்டாக ஒரு படத்தில் பணிப் புரிந்த பாதிப்பாக இருக்கலாம். ஆனால் இம்முறை அருண் விஜய்யை வைத்து அருமையான ஆக்ஷன் படத்தைக் கொடுத்துள்ளார். ட்ராவல் ஏஜென்சி வைத்திருக்கும் செல்வாவிற்கு அவரது காதலி ப்ரியாவுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. எதிர்பாராவிதமாக மஹா என்னும் ரவுடியைக் கொன்று விட்டான் என செல்வா மீது பழி வந்து விழுகிறது. செல்வாவைக் கொன்று ப...