மயூரன் விமர்சனம்
மயூரன் என்றால் 'உன்னைக் காப்பவன்' அல்லது 'வெற்றி புனைபவன்' என்கிறார் இயக்குநர் நந்தன் சுப்பராயன். இவர் பாலாவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். 'உன்னைக் காப்பவன்' என்ற பொருளே படத்தின் தலைப்பிற்குப் பொருந்தும். அதனால் தா நாயகனுக்கு சேகு எனும் சே குவேரா என்று பெயர் சூட்டியுள்ளார் இயக்குநர்.
சிதம்பரத்திலுள்ள பொறியியல் கல்லூரி விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் நாயகனின் அறை தோழன் ஒருவன் காணாமல் போகிறான். அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதும், அவனைத் தேடும் நாயகனுக்கு என்ன சிக்கல் ஏற்படுகிறது என்பதும்தான் படத்தின் கதை.
மயூரனாகிய நாயகனால் தன் நண்பனைக் காப்பாற்ற முடியவில்லை. அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியவே மிகவும் மெனக்கெடுகிறான். தனக்கு ஏதும் நிகழாமல் தன்னைத் தானே நாயகன் காப்பாற்றிக் கொள்வதுதான் படத்தின் க்ளைமேக்ஸ். மயூரன் தன்னைக் காப்பாற்றிக் கொள்பவனாகச் சுருங்கிக் கொள்கிறான்.
படத்தின் கதைக்...