ஒரு கதையின் கதை
தமிழ் இலக்கிய உலகிலிருந்து அனேகமாக மறக்கப்பட்டுவிட்ட ஒரு சிறந்த சிறுகதையாசிரியர் கிருஷ்ணன் நம்பி. மிகக் குறைவாகவே எழுதி, மிகக் குறைவான வாசகர்களையே சென்றடைந்தவர் இவர். இவரது ‘மாஸ்டர் பீஸ்’, 1974 இல் எழுதப்பட்ட ‘மருமகள் வாக்கு’ எனும் சிறுகதை.
(ஓவியம்: கார்த்திகேயன் சுகுமாரன்)
அசோகமித்திரன் இக்கதையை ‘கணையாழி’ ஆசிரியராக, கையெழுத்துப் பிரதியில் படிக்கும்போதே, ஒரு மகத்தான படைப்பு என்று தனக்குப் பட்டதாகப் பதிவு செய்திருக்கிறார்.
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஒரு கட்டுரையில்.. பொப்புத்தி, ஆதிக்கக் கலாச்சாரம் என்று கலாச்சாரத் தளத்தில் மக்களின் மனங்களைத் தகவமைக்கும் அரசியலைப் பற்றியெல்லாம் இன்று நாம் பேசத் தொடங்கியுள்ளோம். இதையெல்லாம் விளக்கமாகப் புரிய வைப்பதற்கு கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு’ ஒரு கதை போதும் என்கிறார். இக்கதையை மேலும் பல இலக்கியவாதிகள் மிக உயர்வாகச் சொல்லுகிறார்கள். இக்கதை பி...