Shadow

Tag: மறக்குமா நெஞ்சம் திரை விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு பள்ளி 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் முறைகேடு செய்து முழுத் தேர்ச்சி அடைந்து விட்டதாக கோர்ட்டில் வழக்குத் தொடுக்கப்படுகிறது.  அதுவும் 12 ஆண்டுகள் கழித்து. உடனே நீதிமன்றமும் அந்த வருடத்தில் தேர்வு எழுதிய அத்தனை மாணவர்களும் மீண்டும் அதே வகுப்பில் மூன்றாண்டு காலம் படித்து தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும், அப்படி வெற்றிபெறத் தவறினால் அவர்கள் மேற்படிப்பு படித்து பெற்ற பட்டங்கள் எல்லாம் செல்லாது என்று அறிவிக்கப்படும் என்கின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பைக்  கொடுக்கிறது.அந்த குறிப்பிட்ட வருடத்தில் படித்திருந்த அத்தனை மாணவ மாணவிகளும் ஆளுக்கொரு திசையில் சென்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  சரி இப்படி ஒரு மடத்தனமான தீர்ப்புக்கு செவி சாய்த்து யார் மீண்டும் படிக்க வரப்  போகிறார்கள் என்று நாம் நினைத்தால், இயக்குநர் அந்த வருடத்தில் படித்த அத்தனை மாணவ மாணவிகளையும் யூனிபார்ம் சகிதமா...