Shadow

Tag: மலபார்

சுடானி ஃப்ரம் நைஜீரியா

சுடானி ஃப்ரம் நைஜீரியா

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
திருவனந்தபுரம் பொறியியற் கல்லூரிக்குப் போய்க் கொண்டிருந்த காலத்தில் அங்கேயிருந்த கால்பந்தாட்ட ஆட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் மலபார் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். மலப்புரத்தில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு பதினைந்து மணி நேரம் பயணம் செய்து ஆட்டம் முடித்த உடனேயே ஞாயிறன்றே இரவோடிரவாகத் திரும்பி வரும் ஆட்டக்காரர்களைப் பார்த்திருக்கிறேன். கால்பந்தாட்டம் என்பது மலபார் பகுதிகளைச் சேர்ந்தவர்களைப் பொறுத்தவரை பெரும்போதை என்பதை உணர்ந்த காலம் அது. பேசும்போது கூட உலகப் புகழ் பெற்ற ஆட்டக்காரர்களைப் பற்றி மட்டுமில்லாமல் ஸ்பானிஸ் ஜெர்மன் இங்கிலிஸ் லீகுகளில் ஆடும் ஆட்டக்காரரகள் குறித்தும் விரல் நுனியில் தகவல் வைத்திருப்பார்கள் அவர்கள். அதிலும் பதினொருவர் ஆடும் ஆட்டத்தை வெட்டிச் சுருக்கி எழுவர் ஆடும் ஆட்டமாக மாற்றி, 'செவன்ஸ்' என்று நாமகரணம் சூட்டி மலபாரின் மூல...