மழை சாரல் – இசை ஆல்பம்
மேலை நாடுகளைப் போல தமிழிலும் இண்டிபெண்டென்ட் ஆல்பம் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன .
இப்பொழுது, "மழை சாரல்" எனும் புது ஆல்பமாக வந்திருக்கிறது.
இசையமைப்பாளர் யாதவ் ராமலிங்கம் இசையில் ஸ்வேதா மோகன், அசோக் ஐயங்கார் குரல்களில் உருவாகியிருக்கும் பாடலுக்கு கருணாகரன் வரிகளை எழுதியுள்ளார்.
'காதல் மேகம் காற்றிலாடும் நெஞ்சில் வா மழையே' என்று தொடங்குகிறது இந்தப் பாடல். காதலைக் கெளரவப்படுத்தும் ஒரு தனி வீடியோ ஆல்பமாக இது உருவாகி இருக்கிறது. இதனை ஆருத்ரா கான் வர்ஷா நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க மாண்டேஜ் முறையில் பாடல் ஒலிக்கிறது. படம் பிடிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் காதலுக்கு வேறொரு தளத்தில் வேறொரு வகையில் பொழிப்புரை எழுதுகின்றன.
ஏற்கெனவே ராஜேஷ் ராமலிங்கம் என்ற பெயரில் ஒரு படத்திற்கு பாடல்களை உருவாக்கி எஸ்.ஜானகியைப் பாட வைத்தவர் , இப்போது யாதவ் ராமலிங்கம் எனப...