2024ல் நெட்ப்ளிக்ஸில் ஸ்டிரீமிங் செய்யப்படவிருக்கும் தமிழ்ப் படங்கள்
பொங்கல் பண்டிகையை ஒட்டி 2024 ஆம் ஆண்டிற்கான நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது!பொங்கல் பண்டிகையை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் தங்கள் தளத்தில் ஸ்ட்ரீமாக உள்ள காப்புரிமை பெற்ற ஒன்பது தமிழ்ப் படங்கள் குறித்தான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் முதலில் திரையரங்குகளில் வெளியாகும். தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் நடிப்பை ரசிகர்கள் பெரிய திரையில் பார்த்து அனுபவித்தப் பின்னர், மீண்டும் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் குடும்பத்துடன் இல்லத்திலும் பார்த்து ரசிக்கலாம்.இந்த 9 படங்களின் தலைப்பைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது நெட்ஃபிலிக்ஸ். நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி', நடிகர் கமல்ஹாசனின் 'இந்தியன்2', சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் மற்றும் இன்னும் பல திரைப்படங்கள் இந்த வருடம் நெட்ஃபிலிக...