Shadow

Tag: மாதவன்

‘வாழ்த்துகள்’ படத் தோல்வியும் – சீமானின் திமிர்த்தனமும்

‘வாழ்த்துகள்’ படத் தோல்வியும் – சீமானின் திமிர்த்தனமும்

இது புதிது, கட்டுரை, சினிமா
“வாழ்த்துகள் (2008) படம் தோல்வி அடைந்ததற்கு என்னுடைய திமிர்த்தனம்தான் காரணம். என் தாய்மொழி தமிழிலேயே எல்லா உரையாடலும் எழுதணும்னு நினைச்சேன். அதுக்கு வருத்தப்படுறேன். இந்த இனத்தில் பிறந்ததற்கு, பெருமையடையுறேன். அதே சமயம் சிறுமையும் அடையுறேன். ‘ஐ லவ் யூ’ன்னு சொல்ல வேண்டிய இடத்தில் ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ எனச் சொல்வது நெருடலாக இருக்குன்னு விமர்சனம் எழுதுறாங்க. காசி அண்ணனிடம் சொன்னேன். அன்பைக் கூட தாய்மொழியில் பரிமாறிக் கொள்ளாத ஓர் இனம் இருந்தாலென்ன, செத்தாலென்ன என்று கேட்டார். தமிழர்களுக்குத் தாய்மொழி அந்நியப்பட்டுப் போச்சு. இதை விட இழிவு வேறெதுவுமில்லை.” - இயக்குநர் சீமான் (சீமான் செய்த துரோகம்) ... வாழ்த்துகள் படத்தின் கதைச்சுருக்கம்: மாமியார், மாமனாரை நேசிக்கும், குடும்பத்தைச் சிதைக்காத மனைவி அமைந்தால் தேவலாம் என நினைக்கிறார் நாயகன். ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் அப்படியொருவரைப் பார்த...
ராக்கெட்ரி: நம்பி விளைவு விமர்சனம்

ராக்கெட்ரி: நம்பி விளைவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நம்பி நாராயணனுடைய வரலாற்றுப் படம் (Biopic) எடுக்கிறார்கள் எனும்போதே எனக்கு இயல்பாக ஆர்வம் எழுந்தது. 90களின் சமயத்தில்தான், இந்திய பத்திரிகைத் துறையில் இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் மையம் கொண்டிருந்தது. இப்படியெல்லாம் நடப்புலகின் புதிரான சம்பவங்களை அம்பலப்படுத்துவது அல்லவா பத்திரிகை தர்மம் என்று மிகவும் உணர்ச்சி மேலீட்டோடு கவனித்து வந்த பல வழக்குகளில் ஒன்று நம்பி நாராயணன் வழக்கு. பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தது, அவர் மேலான குற்றசாட்டுகள் நிரூபணம் ஆகாமல் சிபிஐ கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி ஆனதெல்லாம் நடந்ததும், பத்திரிகைகள் அவர் மேல் கவிந்த வெளிச்சத்தை விலக்கிக் கொண்டுவிட்டன. பத்திரிகைகளால் அதிகம் கண்டுகொள்ளப்படாத அந்தக் காலகட்டத்திலும், நம்பி நாராயணன் தன் மீது அபாண்டமாகப் போடப்பட்ட தேசத்துரோக களங்கத்தைப் போக்கிக் கொள்ள தொடர்ந்து சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு வந்திருக்கிறார். உச்சநீதிமன்றம்...
சைலன்ஸ் விமர்சனம்

சைலன்ஸ் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
சியாட்டல் வாழ் இசை கலைஞரான அந்தோனி கொன்சால்வேஸ் மர்மமான முறையில் ஒரு பேய் வீட்டில் கொல்லப்படுகிறார். காது கேட்காத, வாய் பேச முடியாத அவரது காதலி சாக்‌ஷியும் அமானுஷ்யமான முறையில் தாக்கப்படுகிறார். கொலைக்குக் காரணம் அமானுஷ்யம் சூழ்ந்த அந்த வீட்டின் பேய் என்று அனைவரும் நம்பும் பட்சத்தில், கொலையாளியைப் பிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார் காவல்துறை அதிகாரியான மகாலக்‌ஷ்மி. கொலைக்கான காரணத்தையும், கர்த்தாவையும் மகாலக்‌ஷ்மி எப்படிக் கண்டுபிடித்தார் என்பதுதான் படத்தின் கதை. தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் எடுக்கப்பட்ட படம், மலையாளத்தில் டப் செய்யப்பட்டு மும்மொழியில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே என நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள படம். எனினும், சியாட்டலில் கதை நிகழ்வதாலோ என்னவோ, படத்தில் ஒன்ற முடியாமல் ஒரு அந்நியத்தன்மை இழையோடுகிறது. டீட்டெயிலிங் இல்லாத கத...
ராக்கெட்ரி: குற்றமற்ற மாதவனும், பக்கபலமான சிம்ரனும்

ராக்கெட்ரி: குற்றமற்ற மாதவனும், பக்கபலமான சிம்ரனும்

சினிமா, திரைத் துளி
பார்த்தாலே பரவசம் (2001), கன்னத்தில் முத்தமிட்டால் (2002) ஆகிய படங்களில் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள் மாதவனும், சிம்ரனும். இந்தப் படங்கள் அவர்களை வெறும் ஜாலியான காதல் ஜோடிகளாக மட்டும் காட்டவில்லை, மாறாக சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருந்தனர். காதலை பலப்படுத்துவதே இத்தகைய சோதனைகள்தானே! சோதனைகள் மற்றும் இன்னல்கள் கடினமான இருந்தால் தான் உறவு, அழகாகவும் வலுவானதாகவும் இருக்கும். மீண்டும் அத்தகைய சோதனையான, அழகான, வலுவான ஜோடிகளாக, 17 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு, பன்மொழி திரைப்படமான 'ராக்கெட்ரி' படத்தில் மாதவனும் சிம்ரனும் இணைகின்றனர். ராக்கெட்ரி, நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டதால், கதாநாயகனின் தனிப்பட்ட வாழ்க்கையோடு இயைந்த, மிகவும் தீவிரமான கதையம்சத்தைக் கொண்டுள்ளது. திரு மற்றும் திருமதி நம்பியாக மாதவன் மற்றும் சிம்ரன் ஜோட...
விக்ரம் வேதா விமர்சனம்

விக்ரம் வேதா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் தலைப்பு போடும் முன்பே படம் என்ன மாதிரியான ஜானர் என 2-டி அனிமேஷன் மூலம் கோடிட்டுக் காட்டிவிடுகின்றனர் புஷ்கர் - காயத்ரி. அந்த 2டி குறும்படத்தில், வேதாளம் விக்கிரமாதித்யன் தோளைச் சுற்றிக் கொண்டு, ஒரு கதையைச் சொல்லவா எனக் கேட்கிறது. வேதா எனும் ரெளடி புதிர் போட, காவல்துறை அதிகாரி விக்ரம் அதை எவ்வாறு அவிழ்க்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பு ஆச்சரியமூட்டுகிறது. முதல் ஃப்ரேமிலேயே கதை தொடங்கி விடுகிறது. சின்னச் சின்ன வசனங்களிலும் ஆழமாய்ப் புதிராயும் கதை பொதிந்துள்ளது. படம் முடியும் பொழுதுதான், படத்தின் அனைத்துக் காட்சியும் ஒன்றோடு ஒன்று எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளது எனத் தெரியும். மாதவன் தனது நேர்த்தியான நடிப்பால் கட்டுக்கோப்பாய் ரசிகர்களைப் பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அசத்தலாக அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி. மாதவனின் நேர்த்தியை ரசிப்...
சென்னை ராக்கர்ஸ் – செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக்

சென்னை ராக்கர்ஸ் – செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக்

சமூகம்
நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டு செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் ஆட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் விளையாட இருக்கும் அணி தான் 'சென்னை ராக்கர்ஸ்'. தமிழ்த் திரையுலகைச் சார்ந்த சிறந்த நட்சத்திரங்களை உள்ளடக்கியுள்ளது சென்னை ராக்கர்ஸ்.  இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களுக்காகப் பணிபுரிந்து வரும் 'டாட் காம் இன்போவே', 'அடத்தா', 'ஜிமாசா' மற்றும் 'கலாட்டா' ஆகிய நிறுவனங்களின் இயக்குநரும், தலைமை அதிகாரியுமான திரு. சி.ஆர்.வெங்கடேஷ் (சி.ஆர்.வி) இந்தச் சென்னை ராக்கர்ஸ் அணியின் உரிமையாளராகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது."தரமான பாட்மிண்டன் ஆட்டத்தைப் புதுமையான விதத்தில் சினிமா நட்சத்திரங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய குறிக்கோள். நட்சத்திரங்கள் தங்களின் பாட்மிண்டன் திறமையை வெளிப்படுத்த சிறந்ததொரு தளமாக இந்த 'செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக்’ போட்டி விளங்கும். அதுமட்டுமின்றி, பாட்மி...
இறுதிச்சுற்று விமர்சனம்

இறுதிச்சுற்று விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீனவப் பெண்ணான மதியின் திறமையைக் கண்டு கொண்டு, அவரைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து பாக்ஸிங் வெற்றியாளராக்க முயற்சி செய்கிறார் கோச் பிரபு செல்வராஜ். அம்முயற்சியில் பிரபு சந்திக்கும் சிக்கல்களும் தடைகளும் தான் படத்தின் கதை. வாவ்..  இயக்குநர் சுதா கொங்கரா அசத்தலான படத்தைக் கொடுத்துள்ளார். வேட்டை படத்துக்குப் பிறகு மீண்டும் மேடி தமிழ்ப் படம் பக்கம் திரும்பியுள்ளார். வேட்டை படத்திலிருந்ததை விட இப்படத்தில் இளைஞனாகத் தெரிகிறார் கோச் பிரபு செல்வராஜாக நடித்திருக்கும் மாதவன். ஆனால், படம் முழுவதும் 'அரைக்கிழம்' என்றே நாயகியாலும் மற்றவராலும் விளிக்கப்படுகிறார். மிகப் பொறுப்பான கதாபாத்திரத்தில் அற்புதமாகப் பொருந்துகிறார். குத்துச் சண்டை சங்கத்தில் நடக்கும் அரசியலைக் கண்டு கோபுமுறும் பொழுதும், குறிப்பாக ஊழலிலும் நயவஞ்சகத்திலும் ஊறியவர்களை எடுத்தெறிந்து அவமானப்படுத்தும் பொழுதும் கைத்தட்டல்களைப...
வேட்டை விமர்சனம்

வேட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வேட்டை - இயக்குநர் லிங்குசாமியின் படம்.ஓர் ஊரில் பாசமிகு அண்ணன் தம்பி உள்ளனர். அண்ணன் பயங்கொள்ளியாகவும், தம்பி அதற்கு எதிர்மாறாகவும் உள்ளான். காவல் துறை அதிகாரியான அவர்களது தந்தை வேலையில் உள்ள பொழுதே இறப்பதால் அவரின் மூத்த மகனுக்கு அந்தப் பணி கிடைக்கிறது. அண்ணனின் பயத்தைப் போக்க வெளியில் இருந்து உதவி வருகிறான் தம்பி. இதை அவ்வூர் தாதாக்கள் தெரிந்துக் கொள்கின்றனர். பிறகு என்னாகிறது என்பதுடன் படம் சுபமாய் நிறைவுறுகிறது.குலவிச்சை கல்லாமல் பாகற் படும் என்ற பழமொழி படம் முழுவதும் அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது. "அப்பா போலீசு, தாத்தா போலீசு. உன் உடம்பில் போலீஸ் ரத்தம் ஓடுது" என்ற வசனத்தால் வாய்புலற்றப்படுகிறது. பிருந்தா சாரதியின் வசனங்கள் படத்தின் நகைச்சுவைக்கு உதவி உள்ளது.10 வருடத்திற்கு முன் லிங்குசாமியின் "ரன்" படத்தில் நடித்த மாதவனைக் காணவில்லை. இப்டத்தில் மாதவன் உப்பி போய் பெரிதாய் உள்...