‘அறிவே பலம்’ – பலசாலி
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும், சமயோசித அறிவும் தான். இதை சுந்தர்.சி படப் பாணியில் முழுக்க முழுக்கக் காமெடியாக சொல்லும் படம் தான் பலசாலி.
பலமே இல்லாத ஒரு ஆள் எப்படித் தன்னை விட பலசாலிகளைத் தனது புத்திசாலித்தனத்தால் வீழ்த்துகிறான் என்பதை வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையோடு சொல்லும் கதைதான் 'பலசாலி'. சூது கவ்வும் பாணியிலான ‘ப்ளாக் ஹ்யூமர்’ படமாக உருவாகிறது 'பலசாலி'.
பொதுவாக இதுமாதிரியான படங்களில் கோழையான ஹீரோவைப் பின்பகுதியில் வீரனாக்குவது போல் கதை இருக்கும். ஆனால், பலசாலி படத்தின் ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரையுமே ஹீரோ ஒரு சாதாரண ஆளாகத் தான் இருப்பார். ஆனால் அவன் எதிர்த்து வெல்வது எல்லாமே அவனை விட பலசாலியான ஆட்கள் தான். சண்டைக்காட்சிகள் கூட வயிறு வலி...