Shadow

Tag: மாம் vimarsanam

மாம் விமர்சனம்

மாம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆனந்தையும் அவரது மகள் ஆர்யாவையும், தன் குடும்பமாக வரித்து அளவில்லாப் பாசத்தைப் பொழிகிறார் தேவகி. ஆனால் ஆர்யாவால் தேவகியை அம்மாவாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இந்நிலையில் உடன் படிக்கும் மாணவன் ஒருவனால் ஆர்யா பலத்காரத்துக்கு உட்படுத்தப்படுகிறாள். நொறுங்கிப் போகும் மகளை மீட்பதோடு, தேவகி எப்படி தன் அன்பை மகளுக்குப் புரிய வைக்கிறார் என்பது தான் படத்தின் கதை. இரண்டு லாலிவுட் (லாகூர்/பாகிஸ்தான் சினிமா) நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒன்று, ஸ்ரீதேவியின் கணவராக நடித்திருக்கும் அத்னான் சித்திக்; மற்றொன்று, ஸ்ரீதேவியின் மகளாக நடித்திருக்கும் சாஜல் அலி. அத்னான் சித்திக் பார்ப்பதற்கு 'துருவங்கள் பதினாறு' ரஹ்மான் போல் அசத்தலாக உள்ளார். மனைவியைச் சமாதானம் செய்வதாகட்டும், தாயை மறக்க முடியாமல் தேம்பும் மகளைத் தேற்றுவதாகட்டும், குற்றவாளிகள் நிரபராதியெனத் தீர்ப்பளிக்கப் படும்பொழுது கோபப்ப...